கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள மேலவீதி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அரசுப் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்றுவந்த அந்த மாணவியை, அதேப் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் இந்திரஜித் என்பவர் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்த மாணவி முதலில் மறுத்தும், அந்த இளைஞர் விடாமல் மாணவியை காதலிப்பதாக சொல்லி, மாணவியோடு பழகி வந்துள்ளார்.

அதோடு, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததால், அந்த மாணவி 6 மாத கர்ப்பிணியாகியிருக்கிறார். இதனால், இந்திரஜித் செய்த கொடுமை தொடர்பாக தன் தாயிடம் தெரிவிக்க, அவர் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இந்திரஜித்தை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.