Published:Updated:

`அவர் பேச்சை நம்பி பத்திரிகையே அடிச்சுட்டோம்!' - கலங்கிய கரூர் மாற்றுத் திறனாளி ஆசிரியை

கண்ணன் (கைதான இளைஞர்
கண்ணன் (கைதான இளைஞர்

தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி இளைஞர் ஒருவர் ஏமாற்றிவிட்டதாக மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட இளைஞரை போலீஸாரை கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சியில் இருக்கும் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவரின் மகள் பானுமதி (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர், நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் பாலவிடுதி காவல் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

கண்ணன் (கைதான இளைஞர்)
கண்ணன் (கைதான இளைஞர்)
`பெண் குரலில் காதல் வலை; சிக்கிய ஈரோடு இளைஞர்!' -மாஸ்டர் பிளான் போட்ட பட்டதாரிகளுக்கு நேர்ந்த சோகம்

அந்த மனுவில், `நான் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் நாகை மாவட்டம், மயிலாடுதுறை குழந்தைகள் காப்பகத்துக்கு, புதுக்கோட்டை மாவட்டம், பிச்சநத்தம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்னதானம் வழங்க அடிக்கடி வருவார். அப்போது, எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், கண்ணன் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். ஆனால் நான், `மாற்றுத்திறனாளியான என்னை நீங்கள் காதலிப்பதாக சொல்கிறீர்கள். என்னைத் திருமணம் செய்ய உங்க வீட்டில் சம்மதிப்பார்களா' என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'உன்னை மிகவும் நேசிக்கிறேன். யார் எதிர்த்தாலும், உன்னை நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். அதனால், என் காதலை ஏத்துக்க' என்று நம்பிக்கையுடன் பேசினார். அதனால், அவர் காதலை ஏத்துக்கிட்டேன். இதனால், கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தோம். அப்போது, என்னிடம் ரூ.75,000 பணம் வாங்கினார். இந்த நிலையில், கண்ணன் திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டதையடுத்து, என் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து, பத்திரிகை அடித்து உறவினர்களுக்குக் கொடுத்தனர்.

பாலவிடுதி காவல் நிலையம்
பாலவிடுதி காவல் நிலையம்

ஆனால், கடந்த 2-ம் தேதி என்னைச் சந்தித்த கண்ணன், `எனக்குத் திருமணம் வேண்டாம்' என்று என் பெற்றோரிடம் கூறினார். எவ்வளவோ கெஞ்சியும் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார். எனவே, திருமணம் செய்வதாகக் கூறி என்னை ஏமாற்றிய கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்' என்று கண்ணீரோடு கூறி இருந்தார். பானுமதி கொடுத்த புகாரைத் தொடர்ந்து, பாலவிடுதி காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் வழக்கு பதிவு செய்து, கண்ணனைத் தேடி வந்தார். இந்த நிலையில், கும்பகோணத்தில் இருந்த கண்ணனை பாலவிடுதி போலீஸார் கைது செய்தனர்.

`கடன் வழங்க லஞ்சம்; விடிய விடிய விசாரணை!’ - `எஸ் வங்கி' நிறுவனர் அதிரடி கைது

காவல்துறையினரின் விசாரணையில், கண்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. பானுமதி ஆசிரியையாக இருந்ததால், அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே அவரைக் காதலிப்பதுபோல் நடித்ததாக கண்ணன் கூறியதாகக் காவலர்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கண்ணனை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு