Published:Updated:

கரூர்: ரெளடியை வெட்டிக் கொன்ற மர்மக் கும்பல்; காரணம் என்ன?! - தீவிர விசாரணையில் போலீஸ்

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

அருண்குமார் கொலைக்குக் காரணம், முன்விரோதமா, பெண் விவகாரத்தில் எதுவும் கொலை செய்யப்பட்டாரா உட்பட பல்வேறு கோணங்களில், போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கரூர் லாலாப்பேட்டை அருகே ரெளடி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கே பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

 கொலை செய்யப்பட்ட அருண்குமார்
கொலை செய்யப்பட்ட அருண்குமார்
நாமக்கல்: `கணவர் கொடுமை தாங்க முடியலை சார்!' - ஆடு கட்டும் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்ற மனைவி

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகில் மேட்டுமகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது: 22). ரெளடியான இவர்மீது லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு 9 மணி அளவில் கீழசிந்தலாவடி கிராமத்தின் நடுப்பகுதியில் வைத்து, 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட மர்மக் கும்பலால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் அருண்குமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

துள்ளத்துடிக்க அருண்குமாரை வெட்டிய அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தக் கொலைச் சம்பவத்தை அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த லாலாப்பேட்டை காவல் நிலைய போலீஸார், அருண்குமாரின் பிரேதத்தைக் கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தநிலையில், சம்பவ இடத்துக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

கொலை செய்யப்பட்ட அருண்குமார்
கொலை செய்யப்பட்ட அருண்குமார்

இந்தக் கொலை சம்பவத்தை தொடர்ந்து வேறு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, குளித்தலை டி.எஸ்.பி தலைமையில், போலீஸார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தக் கொலைக்கு காரணம், முன்விரோதமா அல்லது பெண் விவகாரத்தில் எதுவும் அருண்குமார் கொலை செய்யப்பட்டாரா உட்பட பல்வேறு கோணங்களில், போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என மூன்று பேரைக் கைதுசெய்துள்ளனர். லாலாப்பேட்டை பகுதியில் கிராமத்தின் நடுவே ரெளடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு