Published:Updated:

கரூர்: சிறுவன் காரில் கடத்தல்; ஒரு மணி நேரத்துக்குப் பின் விடுவிப்பு! - வடமாநிலக் கும்பல் கைவரிசையா?

ஆதிஷ் பிரணவ் உறவினர்களுடன்
ஆதிஷ் பிரணவ் உறவினர்களுடன் ( நா.ராஜமுருகன் )

கடத்தப்பட்ட காரில், ஆபரேஷன் தியேட்டரில் சிகிச்சைக்காகப் பயன்படும் கத்தி, சிறு ஆயுதங்கள் இருந்ததாகவும், காரில் இருந்தவர்கள் இந்தி, பிற மொழிகளில் பேசியதாகவும் ஆதிஷ் பிரணவ் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

கரூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை, காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சிறுவனைக் கடத்த முயன்றது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

கரூர் ரயில் நிலையம்
கரூர் ரயில் நிலையம்

கரூர் மாவட்டம், காந்திகிராமம் நரிக்கட்டியூரைச் சேர்ந்தவர் அருள்சாமி. இவரின் மகன் ஆதிஷ் பிரணவ் (வயது 16). அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவர் நேற்று, காந்தி கிராமம் மேம்பாலம் அருகே சைக்கிளில் சென்றபோது, அவரை உரசியபடி ஆம்னி வேன் ஒன்று வந்து நின்றிருக்கிறது.

கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அதைக் கண்டு பதறிய ஆதிஷ் பிரணவை, ஆம்னி வேனில் வந்த ஐந்து பேர் சினிமா பாணியில் மயக்க மருந்து கொடுத்து, கடத்தியிருக்கிறார்கள். காரில் கடத்தப்பட்ட ஆதிஷ் பிரணவுக்கு, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கரூரை அடுத்த வாங்கல் பகுதியில் கார் சென்றபோது மயக்கம் தெளிந்திருக்கிறது. தான் காரில் கடத்தப்படுவதை உணர்ந்த ஆதிஷ் பிரணவ், கார் கண்ணாடியை எட்டி உதைத்திருக்கிறார். இதனால், கடத்தல் கும்பல் அவரை இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆதிஷ் பிரணவ் உறவினர்களுடன்
ஆதிஷ் பிரணவ் உறவினர்களுடன்
நா.ராஜமுருகன்

இதையடுத்து, சாலை ஓரத்தில் இருந்த விவசாயி ஒருவரது செல்போனிலிருந்து அவரது வீட்டுக்குத் தகவல் கொடுத்து, அதன் பிறகு ஆதிஷ் பிரணவை குடும்பத்தினர் மீட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்ட காரில், ஆபரேஷன் தியேட்டரில் சிகிச்சைக்காகப் பயன்படும் கத்தி மற்றும் சிறு ஆயுதங்கள் இருந்ததாகவும், காரில் இருந்தவர்கள் இந்தி மற்றும் பிற மொழிகளில் பேசியதாகவும் ஆதிஷ் பிரணவ் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால், தங்களுடைய மகனைக் கடத்த முயன்றது வடமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக, சிறுவனின் தந்தை அருள்சாமி, தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், இந்தக் கடத்தல் முயற்சி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தங்களுக்கு யாருடனும் பகையோ, முன்விரோதமோ இல்லை என்பதால், தங்களது மகன் கடத்தப்பட்டதற்கு எந்தவித முன்விரோதமும் காரணமாக இருக்க முடியாது எனச் சிறுவனின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. சிறுவன் ஆதிஷ் பிரணவ், தனது சித்தப்பாவின் அரிசி மண்டியிலிருந்துதான் வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆதிஷ் பிரணவ் உறவினர்களுடன்
ஆதிஷ் பிரணவ் உறவினர்களுடன்
நா.ராஜமுருகன்

இதனால், அரிசி மண்டி உரிமையாளர் மகன் என்பதால், அவரைப் பணத்துக்காகக் கடத்தி முயன்றார்களா அல்லது வேறு காரணங்களுக்காகக் கடத்தினார்களா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். தான்தோன்றிமலை போலீஸார், இந்தக் கடத்தல் முயற்சி சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பட்டப்பகலில், ஆள் நடமாட்டமுள்ள சாலையில் சிறுவன் ஒருவனை மர்ம கும்பல் ஒன்று கடத்த முயன்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு