Published:Updated:

கரூர்: `நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்' - அச்சத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி?

கரூர்

'நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ' என்ற பயத்தில், கரூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்: `நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்' - அச்சத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி?

'நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ' என்ற பயத்தில், கரூரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கரூர்

கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள கொள்ளுத்தினிப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி லட்சுமி. இந்தத் தம்பதிக்கு பிரீத்தி என்ற மகள் இருந்தார். இவர், உப்பிடமங்கலம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். மருத்துவராகும் கனவில் இருந்த இவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்தார். இருந்தாலும், இந்த வருடமும் நீட் தேர்வுக்காகத் தயாராகிவந்தார். இதற்காக, வேங்காம்பட்டியிலுள்ள தன்னுடைய பாட்டி வீட்டிலேயே தங்கி படித்துவந்திருக்கிறார்.

ஆனால், `கடந்த வருடத்தைப்போலவே, இந்த வருடமும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவேனோ...’ என்று அடிக்கடி பாட்டியிடம் புலம்பிக்கொண்டே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்றைய தினம், அதே பகுதியிலுள்ள வீட்டில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு வீட்டில் இருந்த அனைவரும் சென்றுவிட்டனர்.

கரூர்
கரூர்

பிரீத்தியின் பாட்டி மட்டும் நிகழ்ச்சிக்குப் போகாமல், வீட்டுக்கு வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தாராம். வீட்டுக்குள் தனியாக இருந்தபோதுதான் மாணவி பிரீத்தி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். பாட்டி வெளியிலிருந்து, பிரீத்தியைப் பலமுறை அழைத்தும் பதில் வரவில்லையாம். அதனால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிரீத்தி இருந்த்ருக்கிறார். இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பிரீத்தியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வு செய்வதற்காக அவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு, இந்தச் சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.