Published:Updated:

`பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

வெங்கமேடு காவல் நிலையம்

அந்த கடிதத்தில், 'பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். இந்த பூமியில் வாழறத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

`பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

அந்த கடிதத்தில், 'பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். இந்த பூமியில் வாழறத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Published:Updated:
வெங்கமேடு காவல் நிலையம்

கரூரில் உள்ள பிரபல பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர், 'பாலியல் தொல்லையால சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்' என்று நோட்டில் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர், வெண்ணைமலை அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த மாணவி, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர், அந்த மாணவி நீண்ட நேரமாக வெளியில் வராததை கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, அந்த சிறுமியின் தாயிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்து பார்த்ததும், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து, அலறி துடித்திருக்கிறார்.

தூக்கு
தூக்கு

உடனடியாக, வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீஸார், மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, அந்த மாணவி தன்னுடைய டைரியில் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த கடித்ததை கைப்பற்றிய போலீஸார், அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த கடிதம்
அந்த கடிதம்

இந்த நிலையில், அந்த கடிதம் நமக்கும் கிடைத்தது. அந்த கடிதத்தில், 'sexual harrasment ஆல சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை. ஆனா முடியவில்ல. i love you amma, சித்தப்பா, மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன், மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது. சாரி மச்சான் சாரி' என குறிப்பிட்டு, ஹார்ட்டின் படத்தையும் வரைந்து, கையெழுத்திட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனிடம் பேசினோம்.

"அந்த கடிதத்தை பார்த்ததும், நாங்களும் முதலில், பள்ளியில் மாணவிக்கு அப்படி நடந்திருக்குமோ என்று நினைத்து, அந்த மாணவியின் செல்போனை முழுவதுமாக ஆராந்தோம். ஆனா, அப்படி எதுவும் இல்லை. கோயமுத்தூர் மாணவி இறந்த செய்திகளை தினமும் 100 முறை பார்த்து, அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. கோயமுத்தூர் மாணவி இடத்தில் தன்னைப் பொருத்தி பார்த்துகொண்டு, அதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இருந்தாலும், விசாரணையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

வெங்கமேடு காவல் நிலையம்
வெங்கமேடு காவல் நிலையம்

இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர், "கோயமுத்தூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு அடங்குவதற்குள், கரூரில் இப்படி ஒரு சம்வவம் நடந்திருகிறது. 'sexual harrasment'னு அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மாணவி, கோயமுத்தூர் சம்பவத்தை பார்த்து, மன அழுத்தத்தில் இப்படி பண்ணிக்கிட்டார்னு சொல்றது நம்பும்படியாக இல்லை. அந்த மாணவிக்கு 17 வயது. புத்திசாலியான மாணவினு சொல்றாங்க. அதனால், அவருக்கு எதையும் தெளிவாக அணுகும் திறமை இருக்கும். கோயமுத்தூர் மாணவிக்காக தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. அதனால், இதை போலீஸார் மேலோட்டமாக விசாரிக்காமல், தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடந்த உண்மை வெளியில் வர வேண்டும்" என்றார்கள்.