Published:Updated:

கரூர்: காவல் நிலையத்திலிருந்தே தப்பியோடிய பிக்பாக்கெட் திருடன் - சுற்றிவளைத்த போலீஸார்!

கொடியரசு

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்திலிருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பியோட, வேகமாகச் செயல்பட்ட போலீஸார் அமராவதி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த, அந்த பிக்பாக்கெட் திருடனை வளைத்துப் பிடித்தனர்.

கரூர் அருகேயுள்ள புலியூர் வடக்குப்பாளையம் கிராமத்தில், பிரபல பிக்பாக்கெட் திருடனான கொடியரசு, தனது கைவரிசையைக் காட்ட முற்பட்டிருக்கிறான். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, கட்டிவைத்துள்ளனர். அதோடு, பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்குத் தகவலும் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்ததோடு, நள்ளிரவில் கொடியரசை அழைத்துவந்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அமரவைத்துள்ளனர். தொடர்ந்து காலையில் காவல் நிலையத்தில் ஒருசில போலீஸார் மட்டுமே இருந்த நிலையில், அவனுக்கு டிபன் வாங்கி கொடுத்து சாப்பிடவைத்துள்ளனர்.

கரூர்
கரூர்

அப்போது, சாப்பிட்ட இலையை தூக்கிப்போட்டுவிட்டு கை கழுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றபோது, அந்த பிக்பாக்கெட் திருடனுடன் ஒரு பெண் போலீஸாரும் சென்றிருக்கிறார். அப்போது, அந்த பெண் போலீஸாரைத் தள்ளிவிட்டுவிட்டு கொடியரசு தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து உஷாரான போலீஸார், அனைவருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்துத் தேட ஆரம்பித்தனர். அப்போது, அமராவதி ஆற்றங்கரையில் முள் காட்டுக்குள் பதுங்கியிருந்த பிக்பாக்கெட் திருடனை போலீஸார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.