Published:Updated:

கரூர்: செல்போன் பயன்பாட்டில் தகராறு... அண்ணன் பேசாததால், விபரீத முடிவெடுத்த மாணவி

மாயனூர்
மாயனூர் ( நா.ராஜமுருகன் )

'செல்போனுக்காக அண்ணன் பேசமாட்டேங்குறானே' என்று பிரீத்தி, தனது தாயின் சேலையை எடுத்து, வீட்டின் முன்பகுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை அறிந்த அக்கம்பக்கத்தினர், பிரீத்தியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

செல்போன் பயன்படுத்திவதில் ஏற்பட்ட சண்டையில் கோபித்துக் கொண்டு சகோதரர் பேசாமல் இருந்ததால், மனமுடைந்த எட்டாவது படிக்கும் தங்கை, வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாயனூர்
மாயனூர்
நா.ராஜமுருகன்
கரூர்: வாய்க்கால் கரையில் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மாயனூர் அங்கு நகரைச் சேர்ந்தவர் நதியா. இவர், கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 17 வயது நிரம்பிய சுசீந்திரன் என்ற மகனும், பிரீத்தீ என்ற மகளும் உள்ளனர். பிரீத்தி திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா வைரஸ் பரவல் பிரச்னையால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். நதியா மட்டும் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருக்கும் இருவரும், இருக்கும் ஒரு ஆன்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி வந்துள்ளனர்.

மாயனூர் காவல் நிலையம்
மாயனூர் காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

அதை பயன்படுத்துவதில் பிரீத்திக்கும், சுசீந்திரனுக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கிறது. அப்படி, இரண்டு தினங்களுக்கு முன்பு செல்போனை சுசீந்திரனிடம் இருந்து பிடுங்கிய பிரீத்தி, அதனை பயன்படுத்தியுள்ளார். இதனால், கோபமான சுசீந்திரன், தங்கை பிரீத்தியிடம் பேசாமல் கோபித்துக்கொண்டுருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தன் அண்ணன் தன்னோடு பேசாமல் இருப்பதை தாங்கிகொள்ளமுடியாத பிரீத்தி, அண்ணனை சமாதானம் செய்திருக்கிறார். 'இனி செல்போனை நீயே பயன்படுத்து. எனக்கு வேண்டாம். ஆனால், என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதே. அதை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை' என்று சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும், சுசீந்திரன் பிரீத்தியிடம் பேசாமல், வீம்பாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் பிரீத்தி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நதியா வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட, சுசிந்திரன் நண்பர்களை பார்க்க வெளியில் சென்றுள்ளார். 'செல்போனுக்காக அண்ணன் பேசமாட்டேங்குறானே' என்று பிரீத்தி, தனது தாயின் சேலையை எடுத்து, வீட்டின் முன்பகுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதை அறிந்த அக்கம்பக்கத்தினர், பிரீத்தியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மாயனூர்
மாயனூர்
நா.ராஜமுருகன்

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால், பிரீத்தியின் உடல் உடற்கூராய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரீத்தியின் தாய் நதியா கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கைப் பதிந்த மாயனூர் காவல் நிலைய போலீஸார், இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது அண்ணன் தன்னோடு பேசவில்லை என்பதற்காக, சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு