Published:Updated:

`சிறார் வதை வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பகிர்ந்தார்!' - கரூரில் கைதான வடமாநில இளைஞர்

Arrest
Arrest

இவர் தனது மொபைல் போனில் சிறார் வதை படங்களைப் பார்த்ததோடு, அதைப் பதிவிறக்கும் செய்து, நண்பர்களுக்குப் பகிர்ந்து வந்தது தெரியவந்தது.

சிறார் வதை வீடியோக்களைப் பார்த்ததோடு, அதைப் பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பியதாக, கரூரில் பணிபுரியும் வடமாநில இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறார் வதை
சிறார் வதை
சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

சிறார் வதை வீடியோக்களைப் பார்ப்பதும், அதை இணையங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து வலைதளங்களில் பரப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று காவல்துறை எச்சரித்தது. கடந்த ஒருமாத காலமாகத் தமிழகம் முழுக்க பலரையும் கைதும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கரூர் நகர காவல்நிலைய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வடமாநில இளைஞர் நியாஸ் அலி (வயது 23) என்பவரைக் கைது செய்துள்ளனர்.

சிறார் வதை
சிறார் வதை

கரூர், வையாபுரி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு காம்ப்ளக்சில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வரும் ரியாஸ் அலி என்ற இளைஞர், கடந்த ஆறு மாதங்களாகக் கரூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், வேலை பார்ப்பதற்காகக் கரூருக்கு வந்து தங்கியுள்ளார். இவர் தனது மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்ததோடு, அதைப் பதிவிறக்கும் செய்து, நண்பர்களுக்குப் பகிர்ந்து வந்தது தெரியவந்தது.

அதன்படி, கரூர் நகரக் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டம் 67 ஏ, 67 பி, 67 பி பி ஐ.டி சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் மூலம் நியாஸ் அலியைக் கைது செய்தனர். சிறார்கள் மீது நிகழ்த்தப்படும் வதைக் கொடுமைகளைத் தவிர்க்கும் விதமாக, தமிழக காவல்துறை இணையத்தில் சிறார் வதைப் படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்து பகிர்பவர்களைக் கண்காணித்து பட்டியல் தயார் செய்து, தற்பொழுது அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியாஸ் அலி
நியாஸ் அலி

நேற்று சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சிறார் வதை வீடியோக்களைப் பார்த்த இளம் பட்டதாரி இளைஞர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இன்று கரூரில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐபி முகவரி ஆகியவற்றின் மூலம் போலீஸார் இவற்றைக் கண்டறிந்து, இப்படித் தொடர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல