Published:Updated:

கரூர்:` மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பர்; மதுவில் விஷம் கலந்து கொன்ற இளைஞர்!'

காந்திகிராமம்

மோகனிடம் அதைப் பலமுறை எடுத்துக் கூறியும், தொந்தரவு தருவதைத் தொடர்ந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து சமாதானம் பேசுவதற்காகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மதுவில் ஆசிட் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கரூர்:` மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பர்; மதுவில் விஷம் கலந்து கொன்ற இளைஞர்!'

மோகனிடம் அதைப் பலமுறை எடுத்துக் கூறியும், தொந்தரவு தருவதைத் தொடர்ந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து சமாதானம் பேசுவதற்காகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மதுவில் ஆசிட் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Published:Updated:
காந்திகிராமம்

கரூரில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'போலி மது குடித்து இறப்பு' என்று விஷயத்தை அவர் திசைதிருப்ப முயன்றும், போலீஸார் இது திட்டமிட்ட கொலை என்பதைக் கண்டுபிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

கரூர் மாவட்டம், காந்திகிராமம் வடக்குப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தி, மோகன், சசிக்குமார் ஆகிய மூன்று பேரும் மது அருந்தச் சென்றுள்ளனர். அங்கே மூவரும் அமர்ந்து மது அருந்தியபோது, மது அருந்திய மோகன், சசிகுமார் ஆகியோர் வயிற்றுவலியால் துடித்துள்ளனர். இதனால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சிகிச்சையளித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது, ``போலி மது குடித்ததால், மோகன் உயிரிழந்தார்’’ என்ற பரபரப்புக் கிளம்பியது. இந்தநிலையில், கரூர் நகர டி.எஸ்.பி தேவராஜ் உத்தரவின்பேரில், மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அப்படி செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவில் மது பாட்டில்களில் நகைத் தொழிலில் பயன்படுத்தக்கூடிய ஆசிட்டைக் கலந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

மோகன்
மோகன்

இதனால், மோகன் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பமாக உயிரிழந்த மோகனின் நண்பரான தர்மா என்கின்ற கிருஷ்ணமூர்த்தி (23), மதுவில் ஆசிட் கலந்து மோகனுக்குக் கொடுத்ததை போலீஸார் விசாரணையில் ஒப்புக்கொண்டார். மேலும், தனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கடந்தநிலையில் மனைவியிடம் மோகன் தவறாக நடக்க முயன்றதாகவும் சொல்லியிருக்கிறார். மோகனிடம் அதைப் பலமுறை எடுத்துக் கூறியும், தொந்தரவு தருவதைத் தொடர்ந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து சமாதானம் பேசுவதற்காகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மதுவில் ஆசிட் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில், கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தியைக் கைதுசெய்த போலீஸார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism