Published:Updated:

`டி-கம்பெனி தொடர்பு; ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைக் கொல்ல பிளான்!'- கேரள `டான்' தஸ்லீமுக்கு நேர்ந்த கதி

`டான்' தஸ்லீம்
`டான்' தஸ்லீம்

`டான்' தஸ்லீம், காசர்கோடு, மங்களூரு பகுதியில் பிரபல ரவுடியாக வலம்வந்தவர். பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்த புன்ட்வால் பகுதியில், நேற்று முன்தினம் இன்னோவா காரில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்டு கிடப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், கொல்லப்பட்டவர் யார் என்ற விவரத்தைச் சேகரித்தனர். போலீஸாருக்குக் கிடைத்த தகவலில், கொல்லப்பட்ட நபர் கேரள மாநிலம் காசர்கோடை அடுத்த செம்பிரிக்கா பகுதியைச் சேர்ந்த டான் தஸ்லீம் என்பது தெரியவந்தது. டான் தஸ்லீம், காசர்கோடு, மங்களூரு பகுதியில் பிரபல ரவுடியாக வலம்வந்தவர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

டான் தஸ்லீம்
டான் தஸ்லீம்

கடந்த வருடம், மங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், ஆப்கானிஸ்தான் நபர்களுடன் சேர்ந்து தஸ்லீமும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 31-ம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் தஸ்லீம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில்தான் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

Vikatan

இவரது கொலைகுறித்து விசாரித்துவந்த மங்களூரு போலீஸார், ஏற்கெனவே இவருடன் சேர்ந்து கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய ஆப்கானிஸ்தான் நபர்கள் இருவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், துபாயிலிருந்து கடத்திவந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் பறிகொடுத்த கோபத்தில், தஸ்லீமை கடத்திச்சென்றுள்ளனர்.

டான் தஸ்லீம்
டான் தஸ்லீம்

அப்போது நடந்த தகராறில், அவரை காரிலேயே வைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், மேலும் இருவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீஸார் இந்த முதல்கட்ட தகவலை நம்பவில்லை. காரணம், தஸ்லீமின் கடந்த கால வாழ்க்கைதான்.

``என் சாவுக்குக் காரணம் அந்த நான்கு போலீஸ்தான்!' - செங்கல்பட்டு ரவுடி வீடியோவின் `பலே' பின்னணி

காசர்கோடை பதறவைத்த `டான்' தஸ்லீம்!

காசர்கோடை அடுத்த கீழூர் செம்பிரிக்கா கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த தஸ்லீம். இவரின் பேருக்கும் முன்னால் `டான்' பட்டம் வந்ததற்குப் பெரிய பின்னணி ஒன்று சொல்லப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், வறுமையில் வாழ்ந்துவந்துள்ளார். அப்போது, துபாயிலிருந்து வேலைவாய்ப்பு வரவே, அங்கு சென்றுள்ளார். `துபாய் சென்ற பிறகு, முதல்முறையாக ஊருக்கு வரும்போது, அவரின் தோரணையே மாறிவிட்டது' என்கின்றனர், செம்பிரிக்கா வாசிகள்.

டான் தஸ்லீம்
டான் தஸ்லீம்

துபாய் செல்வதற்கு முன் வறுமையில் தவித்த தஸ்லீம், அங்கிருந்து வரும்போது லட்சாதிபதியாக வந்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஊருக்கு வந்த பிறகு தஸ்லீம் சொன்னவைதான் ஹைலைட். `2008-ம் ஆண்டு, மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட நபரை பாரில் வைத்து பார்த்ததாகவும் அதுகுறித்து உளவுத்துறையான `ரா'-வுக்கு தகவல் தெரிவித்த பிறகு, ரா' அதிகாரிகளுடன் நட்பு ஏற்பட்டது என்றும், அதேநேரம் துபாயிலிருந்து தங்கம் கடத்தும் நபர்களுடன் தொடர்பு இருக்கிறது' என்றும் தஸ்லீம் கிராம மக்களிடம் கூறிவந்துள்ளார்.

`10 லட்சம் பணம் வரலைன்னா, கொன்னே போட்ருவோம்!’- ரவுடி ஜானியால் மிரளும் வேலூர் தொழிலதிபர்கள்

இந்தக் கதைகளைத் தாண்டி, இவர்மீது காசர்கோடு பகுதிகளில் கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை என 12 வழக்குகள் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் ஒரு டான் ஆகவே வலம்வந்துள்ளார் தஸ்லீம். போலி பாஸ்போர்ட் வழக்கு, இரண்டு கொலை வழக்குக்காக 2011-ம் ஆண்டில், சர்வதேச போலீஸ் உதவியுடன் கேரளாவுக்கு அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பின் துபாய் செல்வதை நிறுத்திய தஸ்லீம், காசர்கோட்டிலேயே வசித்துவந்துள்ளார். அப்போது, அரசியலிலும் காலடி எடுத்துவைத்துள்ளார்.

பா.ஜ.க தலைவர்களுடன் டான் தஸ்லீம்
பா.ஜ.க தலைவர்களுடன் டான் தஸ்லீம்

இவர், காசர்கோடு பகுதி பா.ஜ.க சிறுபான்மை அணியின் செயலாளராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காசர்கோடு மற்றும் மங்களூரு பகுதிகளில் அரசியல் தலைவர்களுடன் நெருக்கம் காட்டிவந்துள்ளார். ஆனால் 2012-ம் ஆண்டு, கர்நாடக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் டி-கம்பெனிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. தாவூத்தின் டி-கம்பெனியில் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைக் கொல்வதற்கு பிளான் போட்டதாக, தஸ்லீம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரை டெல்லி சிறப்புப் படை கைதுசெய்தது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, மணல் மாஃபியா! - சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் கொல்லப்பட்ட ரவுடி

ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து இதுவரை போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை. தஸ்லீமின் தொடர் வெளிநாட்டுப் பயணங்களும் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் போலீஸாரால் எழுப்பப்பட்டுள்ளன. இதற்காக சில முறை கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.

டான் தஸ்லீம்
டான் தஸ்லீம்

இதன்பின், பா.ஜ.க-விலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், துபாயில் இருந்தபோது பழக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நபர்களுடன் சேர்ந்து, கடந்த வருடம் மங்களூரு நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸிடம் மாட்டிக்கொண்டார். இதற்காக சிறையில் இருந்தவர், ஜாமீனில் வெளியே வந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூங்கிய நேரத்தில் வீடுபுகுந்து வெட்டிக்கொன்றனர்! - ரவுடி கொலையில் கும்பல் விட்டுச்சென்ற `க்ளு'
அடுத்த கட்டுரைக்கு