Published:Updated:

`சிரித்துப் பேசியதை தவறாக எடுத்துக்கிட்டார்!’ -லாரி டிரைவரின் மனைவியைக் கடத்திய காட்பாடி பைனான்ஸியர்

சரவணன் தன் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக பைக்கில் சென்றார். அந்தநேரத்தில் தன் வீட்டருகே பைனான்ஸியர் சபரியின் கார் நிற்பதைக் கவனித்திருக்கிறார்.

காட்பாடி காவல்நிலையம்
காட்பாடி காவல்நிலையம்

வேலூரை அடுத்த காட்பாடி நேரு தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (37). லாரி ஓட்டுநர். இவரின் மனைவி துர்கா (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் துர்கா, அதே பகுதியைச் சேர்ந்த பைனான்ஸியர் சபரி என்பவரிடம் அடிக்கடி கடன் வாங்கியுள்ளார். 

Money
Money
Representational image

பணம் கொடுக்கல் வாங்கலில் பைனான்ஸியர், துர்காவுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளார். கடந்த 30-ம் தேதி சரவணன் தன் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக பைக்கில் சென்றார். அந்தநேரத்தில் தன் வீட்டருகே பைனான்ஸியர் சபரியின் கார் நிற்பதைக் கவனித்திருக்கிறார்.

Vikatan

அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சரவணன் சென்றுவிட்டார். மகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிலிருந்த அவரின் மனைவி மாயமாகியிருந்தார். வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த சபரியின் காரும் இல்லை. 

கடத்தல்
கடத்தல்
மாதிரி படம்

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் விசாரித்துள்ளார். அப்போது, சபரியுடன் வந்த நான்கு நபர்கள் துர்காவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கடத்திச் சென்றதைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சியடைந்தார். மனைவியைப் பல இடங்களில் தேடி அலைந்தார்.

`திருடனுக்குத் தேள்கொட்டிய கதை!'- கரைக்கு வந்தும் கைக்கு வராத ரூ.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம்

பைனான்ஸியர் வீட்டுக்கும் சென்று பார்த்தார். அவர் அங்கு இல்லை. இதையடுத்து, காட்பாடி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். `என் மனைவி சிரித்துப் பேசுவதைப் பார்த்து விருப்பப்படுகிறார் என்று பைனான்சியர் தவறாக நினைத்துக்கொண்டார்.

Katpadi Police Station
Katpadi Police Station

நான் வீட்டுக்கு வந்துசெல்லும் நேரத்தை நோட்டமிட்டு மனைவியைக் கடத்திச்சென்றுவிட்டார். மனைவியை மீட்டுக் கொடுங்கள்’ என்று புகாரில் கூறியுள்ளார் சரவணன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், பைனான்ஸியர் சபரி மற்றும் அவரின் உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவுசெய்து தேடிவருகிறார்கள். இளம்பெண் துர்கா கடத்தப்பட்டு இரண்டு நாள்களைக் கடந்தும், இன்னும் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. `பைனான்ஸியருடனான கொடுக்கல் வாங்கல் தகராறில் அவர் கடத்தப்பட்டாரா... அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?' என காட்பாடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.