Published:Updated:

2 ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்; தந்தை உட்பட 2 பேர் கைது! - கேரளச் சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்

``விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 30க்கும் அதிகமானவர்கள் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்”

sexual harassment
sexual harassment

கேரளா மாநிலம் மலப்புரத்தில் தந்தையின் அனுமதியுடன் மகளுக்குக் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.

sexual harassment
sexual harassment

பள்ளிக்கு வந்தாலும், ஒருவித கலக்கத்துடனே இருந்துள்ளார். இதை கவனித்த பள்ளிநிர்வாகம், நிலைமை சரியில்லை எனத் தெரிந்துகொண்டது. பின்னர், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து, சைல்டு-லைன் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாணவி கூறிய தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.

``2 ஆண்டுகளாக அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தன் தந்தை உட்பட, அவரது நண்பர்கள் எனப் பலரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 30க்கும் அதிகமானவர்கள் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக திருராங்கடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் தந்தை உள்ளிட்ட இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.

sexual harassment
sexual harassment

சிறுமி சனிக்கிழமையன்று குழந்தைகள் நலக் குழு (சி.டபிள்யூ.சி) மலப்புரம் முன் ஆஜர்படுத்தப்பட்டு, குலந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கபட்டார். இதேபோல, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில், தாயே, மகளை பாலியல் தொழிலுக்குத் தள்ளியுள்ளார். 15 வயதான அந்தச் சிறுமி மற்றும் அவரது சகோதரியும் பாலியல் தொழிலாளியாக மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.