Published:Updated:

`மூட்டுவலி மருந்து; துப்பாக்கி; மயில் வேட்டை!' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த மூவர் கும்பல்

மயில் வேட்டை நடத்தியவர்கள்
News
மயில் வேட்டை நடத்தியவர்கள்

மயில்களை வேட்டையாடிய சேனா ஜேம்ஸ், சிஜோ ஜாய் மற்றும் ஷாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

கேரளாவில் பழத்துக்குள் வெடிமருந்து வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. அந்தச் சம்பவம் குறித்து இப்போதும் மக்களிடம் பேசப்பட்டுவரும் நிலையில், வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கேரள வனப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் வகையில், வனப்பகுதிகளில் ரோந்துப் பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழக-கேரள எல்லைப் பகுதியான தென்மலை அருகே உள்ள ராக் வுட் என்ற எஸ்டேட் மற்றும் வனங்கள் நிறைந்த பகுதியில் சிலர் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனால் செந்துருனி வனப்பகுதியின் வார்டன் சஜீவ்குமார் தலைமையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

வனத்துறை அலுவலகம்
வனத்துறை அலுவலகம்

அப்போது அங்குள்ள எஸ்டேட் பகுதியில் சிலர் மயில்களை வேட்டையாடி எடுத்து வந்து அவற்றைச் சமைக்க முயன்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மயில் எண்ணெய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருப்பதால் அவற்றை வேட்டையாடியதாகவும் தாங்கள் சமைத்துச் சாப்பிட்டது போக எஞ்சியவற்றை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மயில்களை வேட்டையாடிய சேனா ஜேம்ஸ், சிஜோ ஜாய் மற்றும் ஷாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் மூன்று துப்பாக்கிகள் கள்ளத் துப்பாக்கி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

பிடிபட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், வாகனங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் புனலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.