Published:Updated:

போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஸ்வப்னா...

ஸ்வப்னா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வப்னா

தனி ஃப்ளாட் புக் செய்த சிவசங்கரன்... தடதடக்கும் தங்கக் கடத்தல் வழக்கு!

போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஸ்வப்னா...

தனி ஃப்ளாட் புக் செய்த சிவசங்கரன்... தடதடக்கும் தங்கக் கடத்தல் வழக்கு!

Published:Updated:
ஸ்வப்னா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வப்னா
கேரள தங்கக் கடத்தல் வழக்கில், தோண்டத் தோண்ட பூதம் கிளம்புகிறது. இந்தக் கடத்தல் நெட்வொர்க் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளும் என்.ஐ.ஏ-வும் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஃபைசல் ஃபரீத் என்பவர்தான் துபாயிலிருந்து பார்சலில் தங்கத்தை அனுப்பிவைப்பார். யூ.ஏ.இ தூதரக முன்னாள் பி.ஆர்.ஓ-வான ஸரித் அந்தப் பார்சலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றுக்கொள்வார். பிறகு அது ஸ்வப்னா, சந்தீப் நாயர் மூலம் றமீஸிடம் ஒப்படைக்கப்படும். இறுதியில் றமீஸிடம் இருந்து மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த ஜலால், மலப்புரத்தைச் சேர்ந்த முகம்மது ஷாபி, அம்ஜத் அலி ஆகியோர் அந்தத் தங்கத்தை வாங்கி சப்ளை செய்வார்கள். என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்த தகவல்கள் இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நெட்வொர்க்கில் துபாயிலுள்ள ஃபைசல் ஃபரீத் என்பவரைத் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்தபடி தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கூறி வந்தார் ஃபைசல் ஃபரீத். இன்டர்போல் போலீஸ் மூலம் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியானதும், அவர் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவசங்கரன்
சிவசங்கரன்

இன்னொரு பக்கம் ஸ்வப்னாவுடன் போனில் பேசிய தகவல் வெளியானதால், சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல். ‘‘மே 27-ம் தேதி எனக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய யூ.ஏ.இ கவுன்சில் ஜெனரல் ஜமால் ஹூசைன் அல்ஸாபி, ‘வழக்கமாக ரம்ஜான் சமயத்தில் வழங்கும் உணவுப் பொட்டலங்களை ஊரடங்கு காரணமாக இந்த முறை விநியோகிக்க முடியவில்லை. அதற்கு உதவுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். நான் உதவலாம் எனக் கூறியதால், இது பற்றி ஸ்வப்னாவிடம் பேசும்படி கூறினார். அதையடுத்தே நான் ஸ்வப்னாவை அழைத்தேன். உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்ட பிறகு, அதற்கான பில் க்ளெய்ம் செய்வது தொடர்பாகத்தான் ஸ்வப்னாவிடம் பேசினேன்’’ என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜலீல், யூ.ஏ.இ கவுன்சில் ஜெனரல் அனுப்பிய வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஸ்வப்னா...

அவரின் தன்னிலை விளக்கம் இன்னொரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘‘வெளிநாட்டுத் தூதரகங்களை அமைச்சர் தொடர்புகொண்டு பொருள் உதவி பெறுவது அரசாங்க நடைமுறைக்கு எதிரானது. மத்திய வெளியுறவுத்துறை அனுமதி இல்லாமல் அமைச்சர் ஜலீல் பொருள்களை வாங்கி விநியோகம் செய்ததில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன’ என்கிறார்கள்.

இது குறித்து கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், ‘‘தங்கக் கடத்தல் கும்பலுக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ கூறியிருக்கிறது. அமைச்சர் ஜலீலின் முந்தைய சரித்திரத்தைப் பார்த்தால், அவருக்குத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவரும். இவ்வளவு நாள்களாக ஸ்வப்னாவிடம் பேசியது பற்றிச் சொல்லாமல் அமைச்சர் ஜலீல் மறைத்தது ஏன்?’’ எனக் கேள்வி எழுப்புகிறார்.

கே.சுரேந்திரன் - பினராயி விஜயன் - ஜலீல்
கே.சுரேந்திரன் - பினராயி விஜயன் - ஜலீல்

கடத்தல் தங்கத்தை வாங்கியதாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்படும் தங்கம் கடைசியாக மலப்புரத்தில்தான் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஜலீலும் மலப்புரத்தைச் சேர்ந்தவர். எனவே, இதை இணைத்து பி.ஜே.பி இப்போது காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனிடம் ஜூலை 14-ம் தேதி மாலையிலிருந்து 15-ம் தேதி அதிகாலை 2:30 மணி வரை சுமார் ஒன்பது மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸரித்தையும் சந்தீப் நாயரையும் ஸ்வப்னா தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும், ஸ்வப்னாவின் கணவர் ஜெயசங்கர் பெயரில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகில் ஹெதர் டவரில் ஒரு ஃப்ளாட் புக் செய்து கொடுத்ததாகவும் விசாரணையில் சிவசங்கரன் தெரிவித்திருக்கிறாராம். ஐ.டி பார்க்ஸ் மார்க்கெட்டிங் & ஆபரேஷன் டைரக்டர் அருண் பாலச்சந்திரன் மூலம் ஃப்ளாட் புக் செய்திருக்கிறார் சிவசங்கரன். இதையடுத்து அருண் பாலச்சந்திரன் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்வப்னா
ஸ்வப்னா

‘‘முதல்வர் பினராயி விஜயனின் செயலாளராக இருந்த சிவசங்கரன் தங்கம் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து பேச, தனி ஃப்ளாட் எடுத்திருக்கிறார். ஆதாரங்கள் வெளியே வந்த பிறகும் முதல்வர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?’’ என எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்நிலையில் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனோ, ‘‘தீவிரவாதம் குறித்து என்.ஐ.ஏ-யும், தங்கக் கடத்தல் பற்றி சுங்கத்துறையும் விசாரணை நடத்திவருகின்றன. தூதரக அதிகாரி கூறியதன் பேரில்தான் அமைச்சர் ஜலீல் உதவி செய்துள்ளார்’’ என்றார்.

ஸ்வப்னாவின் கால் லிஸ்ட்டை ஆராய்ந்தபோது, போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர், ஏ.டி.ஜி.பி., திருவனந்தபுரம் நகரத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி மற்றும் மீடியாவைச் சேர்ந்த இருவரை ஸ்வப்னா தொடர்புகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் இன்னும் எத்தனை திருப்பங்களைச் சந்திக்குமோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism