கேரள தங்கக் கடத்தல் வழக்கு சூடு பிடித்துள்ளது. ஏற்கெனவே முதல்வர் பினராயி விஜயனின் கீழுள்ள ஐ.டி துறையில் மூன்று பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையும் சந்தேக வளையத்தில் சிக்கியிருக்கிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகத்துக்கு விமானத்தில் வந்த ஒரு பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதை ஜூலை 5-ம் தேதி சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் கேரள ஐ.டி துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய ஸ்வப்னா, முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன், ஐ.டி துறை ஊழியர் அருண் பாலச்சந்திரன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஸ்வப்னாவின் மொபைல் கால் ஹிஸ்டரியில் யு.ஏ.இ தூதரின் காவலர் (கன் மேன்) ஜெயகோஷின் பெயரும் இடம்பெற்றிருப்பதைக் கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஜெயகோஷிடம் கூறினர். ஆனால், ஜெயகோஷ் சட்டென்று தலைமறைவானார். ‘ஜெயகோஷை காணவில்லை’ என்று உறவினர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே அவரது மொபைல் போன் லொக்கேஷனை வைத்து தும்பாவில் தன் மாமனார் வீட்டின் பின்புறம் புதர்காட்டில் பதுங்கியிருந்த ஜெயகோஷை போலீஸ் சுற்றிவளைத்தது. அப்போது தனது கையில் பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் ஜெயகோஷ்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வட்டியூர்காவு வீட்டிலும், அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டிலும் சுங்கத்துறை ரெய்டு நடத்தியது. அதில் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து யு.ஏ.இ தூதர் மற்றும் மற்றும் துணைத்தூதர் ஆகியோர் அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றது குறித்து ஐ.பி-க்கு (இன்டெலிஜென்ஸ் பீரோ) ஜெயகோஷ் தகவல் தெரிவிக்காதது ஏன், தூதர் இல்லாத நேரத்தில் ரிவால்வரை ஒப்படைக்காதது ஏன் என்றெல்லாம் அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள். ஜெயகோஷ் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். ஜெயகோஷுக்கு கடந்த ஜனவரி 8-ம் தேதி மேலும் ஓர் ஆண்டுக்கான பணி நீட்டிப்பை வழங்கியிருந்தார் கேரள டி.ஜி.பி. இதுவும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்துப் பேசிய கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், “மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி யு.ஏ.இ தூதருக்கு கன்மேன் நியமிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். மத்திய அரசு அப்படியெல்லாம் அறிவுறுத்தல் வழங்கவில்லை. `தூதரக கட்டடத்துக்கு பாதுகாப்பு கொடுக்க ஒரு தலைமைக் காவலர் மற்றும் மூன்று போலீஸாரை நிறுத்த வேண்டும்’ என்றுதான் அறிவுறுத்தியது. ஆனால், மாநில அரசுதான் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. இப்போது அவர்கள் மூலம் தங்கக் கடத்தல் கும்பலுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதற்கிடையே கேரள தலைமைச் செயலக சி.சி.டி.வி கேமராக்கள் இடி, மின்னல் காரணமாக பழுதடைந்து விட்டதால் அதைச் சரி செய்வதற்காக நிதி ஒதுக்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுவும் புதிய சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “தங்கக் கடத்தல் வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது. தலைமைச் செயலகத்தின் சி.சி.டி.வி காட்சிகளை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக இடி மின்னலால் அது சேதம் அடைந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார்கள். என்.ஐ.ஏ சோதனைக்கு முன்பு அனைத்து ஆவணங்களையும் அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, தலைமைச் செயலகத்திலுள்ள ஆதாரங்களை என்.ஐ.ஏ விரைந்து கையகப்படுத்த வேண்டும்” என்றார்.

இது பற்றி சி.பி.எம் கேரள மாநிலக் குழு உறுப்பினர் எம்.பி.ராஜேஷ் நம்மிடம், “தூதரகத்துக்குப் பாதுகாப்பு கொடுப்பது குறித்து பாதுகாப்பு ஆய்வுக்குழுதான் முடிவெடுக்கும். ஐ.பி-யின் வழிகாட்டுதலின்படி கன்மேனை நியமிக்க இதற்கு முன்பு இருந்த டி.ஜி.பி சென்குமார் உத்தரவிட்டிருக்கிறார். கன்மேனை நியமித்ததற்கும் மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை. ரமேஷ் சென்னிதலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குற்றச்சாட்டை முன்வைப்பார். பிறகு மறுப்பார். சி.சி.டி.வி காட்சிகள் அழிந்தாலும் திரும்ப எடுக்கும் தொழில்நுட்பம் உள்ளது. எனவே, என்.ஐ.ஏ-வால் கண்டுபிடிக்க முடியாதது எதுவும் இல்லை. அரசியலுக்காக இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.