Published:Updated:

கேரளா: ``என் சாவுக்கு யாரும் காரணமில்லை!'' - தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேரள ஆளுநரின் டிரைவர் தேஜஸ்
கேரள ஆளுநரின் டிரைவர் தேஜஸ்

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானின் கார் டிரைவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநில ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகமது கான். இவருக்கு இரண்டு டிரைவர்கள் பணியிலிருந்தனர். அவர்களில் சேர்த்தலாவைச் சேர்ந்த தேஜஸ் (48) என்பவரும் ஒருவர். நேற்று முன்தினம் ஆளுநர் ஆரிப் முகமதுகானை திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அவர் குடியிருந்த அரசு குடியிருப்புக்குச் சென்றார். ஆனால், பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது, தேஜஸ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தேஜஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேஜஸ் எழுதிய மரண கடிதம்
தேஜஸ் எழுதிய மரண கடிதம்

தேஜஸ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தன் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருக்கிறார். 'வாழ்க்கையை முடித்துக்கொள்ளப்போகிறேன்' என்று அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, தேஜஸின் அறையைச் சோதனை செய்த போலீஸார், அவர் எழுதியதாக ஒரு கடிதத்தைக் கண்டெடுத்தனர். தேஜஸ், `என் மரண வாக்குமூலம்' எனத் தலைப்பிட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ``எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் இறக்கப்போகிறேன்.

என் சொந்தப் பிரச்னைகளால் தற்கொலை செய்துகொள்கிறேன். என் மரணத்துக்கு வேறு யாரும் காரணம் இல்லை" என அவர் குறிப்பிட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தேஜஸின் குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் வசித்துவருகின்றனர். தேஜஸ் ஏற்கெனவே சுற்றுலாத்துறையில் பணிபுரிந்தவர்.

தற்கொலை செய்துகொண்ட தேஜஸ்
தற்கொலை செய்துகொண்ட தேஜஸ்

பின்னர், சில வருடங்களாக, திருவனந்தபுரம் ராஜ்பவனில் ஊழியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார் தேஜஸ். தேஜஸின் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானின் கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா: மனைவியுடன் பிரச்னை; 2 மகன்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை! - என்ன நடந்தது?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு