Published:Updated:

பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளைக் கொல்ல சதித்திட்டம்! - நடிகர் திலீப் வழக்கை விசாரிக்க தடை இல்லை

நடிகர் திலீப்

நடிகர் திலீப் வழக்கை சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளுக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரிகளைக் கொல்ல சதித்திட்டம்! - நடிகர் திலீப் வழக்கை விசாரிக்க தடை இல்லை

நடிகர் திலீப் வழக்கை சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளுக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Published:Updated:
நடிகர் திலீப்

பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது. அந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்த அதிகாரிகளைக் கொலை செய்ய நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் அது தொடர்பான சில ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் திலீப் உட்பட ஆறுபேர் மீது அதிகாரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். சதித்திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப், அவரின் தம்பி அனூப், தங்கையின் கணவர் சுராஜ், உறவினர் அப்பு, திலீப்பின் நண்பர் பைஜூ செங்ஙமனாடு, ஆலுவாயைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சரத், டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க உதவி செய்த சாய் சங்கர் உள்ளிட்டோரிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் திலீப் உள்ளிட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில் இந்த வழக்கில் திலீபின் மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

நடிகர் திலீப் - நடிகை காவ்யா மாதவன்
நடிகர் திலீப் - நடிகை காவ்யா மாதவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், ``போலீஸார் திட்டமிட்டு எனக்கு எதிராகச் சதி செய்கின்றனர். எனவே என்மீது பதியப்பட்ட வழக்கை ரத்துச்செய்ய வேண்டும். இது போலீஸுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் மூலம் விசாரணை நடத்தக் கூடாது. சி.பி.ஐ போன்ற வேறு ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும்” எனவும் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த மனுவை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி சியாத் ரஹ்மான், ``இந்த வழக்கை ரத்து செய்யவேண்டிய அவசியம் இல்லை” என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதற்கு முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாகவும், வழக்கை சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகளுக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தடை இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காவ்யா மாதவன்
காவ்யா மாதவன்

இது ஒருபுறமிருக்க, நடிகை பாலியல் வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. காவ்யா மாதவன் போன்றவர்களை விசாரிக்கவேண்டியது இருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மே மாதம் 30-ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என ஒன்றரை மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம். தனக்கு எதிரான வழக்கு தீவிரமடைந்துள்ளதால் கலக்கத்தில் உள்ளார் நடிகர் திலீப்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism