Published:Updated:

கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்' - ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்

முஹம்மது ஷாஃபி

மனித இறைச்சி வாங்க பெங்களூரிலிருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியிருக்கிறார். அதற்காக நரபலி கொடுத்த உடலைத் துண்டாக்கி ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்' - ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்

மனித இறைச்சி வாங்க பெங்களூரிலிருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியிருக்கிறார். அதற்காக நரபலி கொடுத்த உடலைத் துண்டாக்கி ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

Published:Updated:
முஹம்மது ஷாஃபி

கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இப்போது மூவரும் போலீஸ் காவலில் உள்ளனர். இரட்டை நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டில் மூவரையும் அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்டப் பயன்படுத்திய மூன்று கத்திகள், ஒரு வெட்டுக்கத்தி, மரக்கட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு மோப்ப நாய்கள் மூலம் வீடும், வீட்டைச் சுற்றியுள்ள வளாகமும் சோதிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வீட்டில் தடயங்களைச் சேகரித்தனர்.

நரபலி கொடுக்கப்பட்ட வீட்டு வளாகத்தில் மோப்ப நாய் சோதனை
நரபலி கொடுக்கப்பட்ட வீட்டு வளாகத்தில் மோப்ப நாய் சோதனை

மேலும் பெண் உருவம் போன்ற டம்மி உடல் ஒன்றை பகவல் சிங்கின் வீட்டுக்குக் கொண்டு சென்று நரபலி கொடுத்தது எப்படி என்பதை லைவாகச் செய்யவைத்து மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஃப்ரிட்ஜில் ரத்தம் எப்படி வந்தது என லைலாவிடம் கேட்டதற்கு, நரபலி கொடுத்ததில் சுமார் 10 கிலோ இறைச்சியை ஃபிரிட்ஜில் இரண்டு நாள்களாக வைத்திருந்தாக அவர் கூறியிருக்கிறார். சமைத்த மனித இறைச்சியைச் சாப்பிட பகவல் சிங் மறுத்திருக்கிறார். இதனால், லைலா அவரது வாயில் இறைச்சியைத் திணித்துள்ளார். ஆனால், பகவல்சிங் இறைச்சியைத் துப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் முஹம்மது ஷாஃபியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாஃபி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``ஸ்ரீதேவி என்ற போலி ஃபேஸ்புக் ஐடி மூலம் பகவல் சிங்கிடம் பெண் போன்று பழகியுள்ளார் ஷாஃபி. அது பெண்தானா என்பதைக் கண்டறிய மெசெஞ்சரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படி பகவல் சிங் கூறியுள்ளார். கிரிமினலாக யோசித்த ஷாஃபி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பேசவைத்து மெசெஞ்சர் மூலம் சில வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.

லைலா, பகவல் சிங்
லைலா, பகவல் சிங்

முதலில் செல்வம் பெருக என சாதாரண பூஜைகளைச் செய்து நடித்துள்ளார் முஹம்மது ஷாஃபி. அப்போது சிறிது சிறிதாக பகவல்சிங் தம்பதியிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் வரை ஷாஃபி வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, இவர்களைக் கொலை வழக்கில் சேர்த்துக்கொண்டால், ஏற்கெனவே வாங்கிய பணத்தைக் கேட்க மாட்டார்கள், மிரட்டி கூடுதல் பணம் பறிக்கலாம் என ஷாஃபி திட்டமிட்டிருக்கிறார். அதற்காகத்தான் நரபலி பூஜை என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார். நரபலி கொடுத்தால் பலன் கிடைக்குமா என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐடி-யிடம் சந்தேகம் கேட்டிருக்கிறார். நான் அப்படி பூஜை செய்து பலன் கிடைத்தது என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐடி-யிலிருந்து பதில் வந்திருக்கிறது. அதை நம்பி நரபலிக்கு தயாராகியிருக்கிறார் பகவல் சிங்.

நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி, பத்மா
நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி, பத்மா

இரண்டாவது நரபலி கொடுத்த சமயத்தில் மனித இறைச்சி விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் எனவும். மார்பகம், இதயம், ஈரல் என ஒவ்வோர் உறுப்பின் இறைச்சிக்கும் தனித்தனி விலை வைத்து விற்பனை செய்யலாம் எனவும் ஷாஃபி ஐடியா கொடுத்துள்ளார். மேலும், மனித இறைச்சி வாங்க பெங்களூரிலிருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியிருக்கிறார். அதற்காக இறைச்சியை ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஷாஃபி சொன்னபடி யாரும் வராததால் இறைச்சியை க்குழிதோண்டி புதைத்துள்ளனர். ஷாஃபி சொன்னதையெல்லாம் தம்பதியர் நம்பியதன் பின்னணி குறித்தும் மேலும் விசாரணை நடத்தவேண்டியிருக்கிறது" என்றனர்.