Published:Updated:

`பெண் போலீஸ்தான் டார்கெட்; 3 மாத டார்ச்சர்'- கலங்கடித்த நபரை ஸ்கெட்ச்போட்டுப் பிடித்த கேரள காவல்துறை

``நீங்கள் எனக்குப் பின்னால் இருப்பதை நான் அறிவேன்… உங்களால் முடிந்தால் என்னைப் பிடியுங்கள்" என ஒவ்வொரு முறையும் சவால் விடுத்த வண்ணம் இருந்துள்ளார்.

புராயில் ஜோஸ்
புராயில் ஜோஸ்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சுற்றி வேலைபார்க்கும் பெண் காவலர்களுக்கு சமீப காலமாக மர்ம நபர் ஒருவர் போன்செய்து ஆபாசமாகப் பேசி வருகிறார் என்று காவல் நிலையத்துக்கு அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பிட்ட அந்த மர்ம நபர் பெண் காவலர்களை மட்டும் குறிவைத்து ஆபாசமாகப் பேசிவந்துள்ளார். மேலும், ``நீங்கள் எனக்குப் பின்னால் இருப்பதை நான் அறிவேன்… உங்களால் முடிந்தால் என்னைப் பிடியுங்கள்" என ஒவ்வொரு முறையும் சவால் விடுத்த வண்ணம் இருந்துள்ளார். முதலில் சாதாரண விஷயம் என எண்ணி போலீஸ் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

கேரள காவல்துறை
கேரள காவல்துறை

ஆனால், தொடர்ந்து மூன்று மாதம் இதேபோல் பல பெண் காவலர்களுக்கு மர்ம நபர் தொந்தரவு கொடுப்பதாகப் புகார் மேல் புகார் குவிந்திருக்கிறது. இதையடுத்து மர்ம நபரின் சவாலை ஏற்றுக்கொண்ட கேரள காவல்துறை அவரைப் பிடிக்கத் தீவிரம் காட்டியது. அதன்படி, மர்ம நபரின் போன் லொக்கேஷனை போலீஸ் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், அதில் சிக்கல் நிலவியுள்ளது. காரணம்... ஒவ்வொரு முறையும் போன் செய்த பிறகு, அந்த சிம் கார்டை கழட்டி வேறு சிம் கார்டை மாற்றியுள்ளார் அந்த மர்ம நபர். பின்னர் பெண் காவலர்களுக்கு வந்த மர்ம போன்கால் குறித்த லிஸ்ட்டை போலீஸார் எடுத்துள்ளனர்.

`ஸ்கெட்ச் போட்ட மனைவி; அபுதாபியில் இருந்துவந்த காதலன்'- கொல்கத்தா அதிகாரி கொலையில் திடுக் திருப்பம்!

அதில் மூன்று நபர்களிலிருந்து மாறிமாறி போன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அந்த எண்கள் பெரும்பாலும் எர்ணாகுளம் - திருவனந்தபுரம் பாதையில் பயணித்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து மூன்று எண்களையும் தொடர்ச்சியாகக் கண்காணித்த போலீஸார் இறுதியாக அந்த மர்ம நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த மர்ம நபர் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா பகுதியைச் சேர்ந்த புத்துவல் புராயில் ஜோஸ் என்ற 29 வயது இளைஞர் என்பதும், ஹோட்டல் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்த இவர்தான் பெண் காவலர்களுக்கு போன் செய்து ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாக செய்துவந்தார் என்பதையும் தெரிந்துகொண்டனர்.

புராயில் ஜோஸ்
புராயில் ஜோஸ்

அந்த இளைஞரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய போலீஸார், ``நாங்கள் டவர் லொக்கேஷனை வைத்து ஈசியாகக் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்தோம். ஆனால், ஒவ்வொரு முறையும் போன் செய்து முடித்த பிறகு, உடனே சிம் கார்டை மாற்றிவிட்டார். அப்போதிருந்து, அவர் மூன்று வெவ்வேறு எண்களில் போன் செய்து எங்களுக்கு சவால்விட்டார். ஆனால், நாங்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டோம்" எனக் கூறியுள்ளனர்.

news credit - mathrubhumi

கரீபியன் தீவில் நித்யானந்தா... ஸ்கெட்ச் போட்ட `ரா'! இனி என்ன நடக்கும்? #VikatanExclusive