Published:Updated:

மதரஸா சென்று திரும்பிய 8 வயது சிறுமியை சாலையில் தூக்கியடித்த இளைஞர் - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

சிறுமியை சாலையில் தூக்கியடித்த இளைஞர்

மதரஸா சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியை இளைஞர் வேகமாக தூக்கி ரோட்டில் பலமாக வீசி அடித்தார். அதன் பின்னர் எதுவும் நடக்காததுபோல் அந்த இளைஞர் திரும்பி போய்விட்டார்.

மதரஸா சென்று திரும்பிய 8 வயது சிறுமியை சாலையில் தூக்கியடித்த இளைஞர் - போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

மதரஸா சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியை இளைஞர் வேகமாக தூக்கி ரோட்டில் பலமாக வீசி அடித்தார். அதன் பின்னர் எதுவும் நடக்காததுபோல் அந்த இளைஞர் திரும்பி போய்விட்டார்.

Published:Updated:
சிறுமியை சாலையில் தூக்கியடித்த இளைஞர்

கேரள மாநிலம், காசர்கோடு மஞ்சேஸ்வரம் பகுதியிலுள்ள மதரஸாவிலிருந்து நேற்று காலை 8 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கடை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் சிறுமியின் அருகே சென்றார். பின்னர் இருகைகளாலும் சிறுமியை வேகமாக தூக்கி ரோட்டில் பலமாக வீசி அடித்தார். அதன் பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து போய்விட்டார் அந்த இளைஞர். ரோட்டில் விழுந்த சிறுமி உடனடியாக எழுந்து சிறிது தூரம் சென்றுவிட்டு மயங்கி விழுந்திருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியைக் கிளப்பியது.

சிறுமியை சாலையில் தூக்கி அடித்த வீடியோ
சிறுமியை சாலையில் தூக்கி அடித்த வீடியோ

இந்த நிலையில், சிறுமிக்கு வெளிக்காயம் இல்லாத நிலையில் உள்காயம் ஏற்பட்டிருப்பதாக அவர் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். சிறுமி நெஞ்சுவலி காரணமாக மங்களூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சைல்ட் லைனில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து மஞ்சேஸ்ச்வரம் போலீஸார் விசாரணை நடத்தி குஞ்சத்தூர் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (31) என்ற இளைஞர்மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர்.

அபுபக்கர் சித்திக் அந்த மாணவி வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரை `சைக்கோ' என அழைப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பும் அபுபக்கர் சித்திக் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல வாரியம் மஞ்சேஸ்வரம் போலீஸுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.