Published:Updated:

`சலவை சோப்பும் 5 ரூபாய் நாணயமும்!’ - அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐபோன் பாக்ஸுக்குள் இருந்த சலவை சோப்
ஐபோன் பாக்ஸுக்குள் இருந்த சலவை சோப்

ரூ.70,900 -க்கு ஆப்பிள் ஐபோன்-12 புக் செய்தவருக்கு சலவை சோப் அனுப்பப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனத்தின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்து அந்த நிறுவனம் பணத்தைத் திருப்பி அனுப்பியுள்ளது.

கேரளா மாநிலம், கொச்சி ஆலுவாவைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவர் கடந்த 12-ம் தேதி அமேசானில் ரூ.70,900-க்கு ஆப்பிள் ஐபோன் 12 புக் செய்திருக்கிறார். அந்தத் தொகையை அமேசான் பே மூலம் புக் செய்தவுடனே செலுத்தியிருக்கிறார். கடந்த அக்டோபர் 15-ம் தேதி டெலிவரிபாய் பார்சலைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். டெலிவரி பாயின் முன்னிலையில் பார்சலைப் பிரித்துப் பார்த்திருக்கிறார் நூருல் அமீன். பார்சலுக்குள் ஆப்பிள் ஐபோன் 12 பாக்ஸ் இருந்தன. அதைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரு சலவை சோப்பும் ஐந்து ரூபாய் நாணயமும் இருந்திருக்கின்றன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நூருல் அமீன், அதை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறர். மேலும் டெலிவரிபாயிடம் வாக்குவாதம் செய்ததுடன், இது குறித்து மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். மேலும் அமேசான் ஆப் மூலம் அந்த நிறுவனத்துக்கும் புகார் அளித்தார்.

அமேசான்
அமேசான்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், அமேசான் நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணை இறுகியதால் அமேசான் நிறுவனம் நூருல் அமீனின் அக்கவுன்ட்டுக்கு 70,900 ரூபாயைத் திருப்பி அனுப்பியது. தங்களிடம் வேறு ஐபோன் கையிருப்பு இல்லை என்பதால் பணம் திருப்பி அனுப்பப்பட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. நூருல் அமீனினுக்கு வந்த ஆப்பிள் ஐபோன் 12 கவரில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை கேரள சைபர் க்ரைம் போலீஸார் சோதித்தனர்.

முன்பு இன்ஃபோசிஸ்; இப்போது அமேசான்; கார்பரேட்களுக்கு அழுத்தம் தரும் ஆர்எஸ்எஸ்; பின்னணி என்ன?

அப்போது அந்த போன் ஜார்கண்ட் மாநிலத்தில் உபயோகத்தில் இருப்பது தெரியவந்தது. இது பற்றி டெலிவரி செய்யும் டீலரிடம் விசாரணை நடந்த சமயத்தில்தான் அமேசான் பணத்தைத் திருப்பி அனுப்பியிருக்கிறது. பணம் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்.பி கார்த்திக் கூறியிருக்கிறார்.

ஐபோன் பாக்ஸுக்குள் இருந்த சலவை சோப்
ஐபோன் பாக்ஸுக்குள் இருந்த சலவை சோப்

கடந்த மாதம் பரவூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ஒன்றே கால் லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் ஒன்றை ஆன்லைனில் புக் செய்திருந்தார். அவருக்கு பார்சல் செய்யப்பட்ட நியூஸ் பேப்பர் டெலிவரி செய்யப்பட்டது. இது குறித்து புகார் வரவே கொச்சி ரூரல் போலீஸ் எஸ்.பி விசாரணை நடத்தி, பணத்தைத் திருப்பி வாங்கிகொடுத்திருக்கிறார். இந்த வழக்கும் போலீஸ் விசாரணையில் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு