Published:Updated:

வேளாங்கண்ணி: கொலையில் முடிந்த வாய்த் தகராறு!- அ.தி.மு.க நிர்வாகிக்குக் கத்திக்குத்து

வேளாங்கண்ணி கத்திக்குத்து
வேளாங்கண்ணி கத்திக்குத்து

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே சண்டையைச் சமாதானம் செய்து தடுக்க முயன்ற வேளாங்கண்ணி அ.தி.மு.க நகரச் செயலாளர் சாம்சன் பிராங்க்ளினுக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.

விடுதி ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தடுக்கச் சென்ற அ.தி.மு.க நகரச் செயலாளரும் கத்திக்குத்தால் காயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முகேஷ்
முகேஷ்

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சுற்றுலாத்தலம் என்பதால் அங்கு நூற்றுக்கணக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த விடுதிகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால், ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், குறைவான ஊழியர்கள் அந்தந்த விடுதிகளில் தங்கி, பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வேளாங்கண்ணி மாதா குளம் அருகே செயல்படும் தனியாருக்குச் சொந்தமான `ஜான்சன் பார்க்’ என்ற விடுதியில் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த முகேஷ் (வயது 32) என்பவரும், சேலத்தைச் சேர்ந்த சதீஷ் ( வயது 32) என்பவரும் பணிபுரிகின்றனர். ஊரடங்கில் இவர்கள் சொந்த ஊருக்குச் செல்லாமல், விடுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். இதில், சதீஷ் தொடர்ந்து முகேஷிடம் குடித்துவிட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டே நாளில் 15 மோதல்கள்.. 3 கத்திக்குத்து.. மருத்துவமனையில் 150 பேர்! -திருச்சியில் `போதை' களேபரம்

விடுதியிலிருந்த இருவருக்கும் இடையே நேற்றிரவு வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. அப்போது முகேஷ், தான் வைத்திருந்த கத்தியால் சதீஷின் இடது பக்க மார்பு, இடது பக்க விலா மற்றும் இடது முன் கை ஆகிய இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே சண்டையைச் சமாதானம் செய்து தடுக்க முயன்ற வேளாங்கண்ணி அ.தி.மு.க நகரச் செயலாளர் சாம்சன் பிராங்க்ளினுக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து, அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே கொலை செய்த முகேஷ், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

முகேஷ்
முகேஷ்

சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீஸார் சதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஊரடங்கு நேரத்திலும் தமிழக அரசின் உத்தரவை மீறி வேளாங்கண்ணி பகுதியில் பல விடுதிகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு