Published:Updated:

ஓடும் வாகனத்தில் 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தோழி, 3 இளைஞர்கள் கைது

மாடல் அழகி வன்கொடுமை | வாகனம்

மாடல் அழகியை தார் வாகனத்தில் வைத்து கொச்சி சிட்டியில் பல இடங்களில் சுற்றிய அந்த இளைஞர்கள், ஓடும் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஓடும் வாகனத்தில் 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தோழி, 3 இளைஞர்கள் கைது

மாடல் அழகியை தார் வாகனத்தில் வைத்து கொச்சி சிட்டியில் பல இடங்களில் சுற்றிய அந்த இளைஞர்கள், ஓடும் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Published:Updated:
மாடல் அழகி வன்கொடுமை | வாகனம்

கேரள மாநிலம், கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், மாடலாக இருக்கிறார். கொச்சியில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்குத் தோழி. மாடல் அழகியை ராஜஸ்தான் தோழி, நேற்று முன்தினம் இரவு கொச்சி எம்.ஜி சாலையிலுள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் மூன்று ஆண் நண்பர்களும் சென்றுள்ளனர். அவர்களை மாடல் அழகிக்கும் அறிமுகம் உண்டு. இரவு பார்ட்டியில் மது குடித்த மாடல் அழகி மயக்கநிலைக்குச் சென்றிருக்கிறார். அவரை வீட்டில் கொண்டுவிடுவதாகக் கூறி இளைஞர்கள் தார் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது, வேண்டுமென்றே அவரின் தோழியான ராஜஸ்தான் பெண் ஓட்டலிலேயே நின்றுவிட்டார். ராஜஸ்தான் பெண்ணின் நண்பர்களான மூன்று இளைஞர்கள் மயங்கிய மாடல் அழகியை தார் வாகனத்தில் வைத்துக்கொண்டு கொச்சி சிட்டியில் பல இடங்களில் சுற்றியவர்கள், மாடல் அழகியை ஓடும் காரில் வைத்தே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை
இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை

பின்னர் சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் ஹோட்டலுக்குச் சென்ற இளைஞர்கள், ராஜஸ்தான் தோழியையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடு பகுதியில் சென்றுள்ளனர். அங்குள்ள மாடல் அழகியின் வீட்டில் ராஜஸ்தான் தோழி அவரை நள்ளிரவில் கொண்டு சேர்த்திருக்கிறார். ராஜஸ்தான் பெண்ணும், அவரின் மூன்று நண்பர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நேற்று காலையில் மயக்கம் தெளிந்த பெண் இதுப ற்றி தனது நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். மாடல் அழகியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்தார்.

தனியார் மருத்துவமனையிலிருந்து காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக களமசேரியிலுள்ள அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து ராஜஸ்தான் பெண் மற்றும் மூன்று இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர். இளம்பெண் மது குடித்த ஹோட்டலிலுள்ள பார் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 தார் வாகனம்
தார் வாகனம்

ராஜஸ்தான் பெண் வேண்டுமென்றே திட்டமிட்டு, தன்னுடைய தோழியான மாடலை நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மாடலை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப் பயன்படுத்திய தார் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை போலீஸ் வெளியிடவில்லை. இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தும்போது கைதுசெய்யப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவரும்.