Published:Updated:

`ஜாலியா இருக்கலாம் வாங்க’- `பீனிக்ஸ் கப்பிள்’ பெண்ணைத் தேடிச்சென்ற தொழிலதிபர்; காத்திருந்த அதிர்ச்சி

கைதுசெய்யப்பட்ட கோகுல் - தேவு தம்பதியர்

ஆடம்பர வாழ்வுக்குப் பணம் வேண்டும், அதற்காக எதுவும் செய்யலாம் என்ற கொள்கையுடைய இளம்பெண் தேவு அதற்கு உடனே சம்மதித்திருக்கிறார். இதற்கு அவரின் கணவனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

`ஜாலியா இருக்கலாம் வாங்க’- `பீனிக்ஸ் கப்பிள்’ பெண்ணைத் தேடிச்சென்ற தொழிலதிபர்; காத்திருந்த அதிர்ச்சி

ஆடம்பர வாழ்வுக்குப் பணம் வேண்டும், அதற்காக எதுவும் செய்யலாம் என்ற கொள்கையுடைய இளம்பெண் தேவு அதற்கு உடனே சம்மதித்திருக்கிறார். இதற்கு அவரின் கணவனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட கோகுல் - தேவு தம்பதியர்

கேரள மாநிலம், திருச்சூர் அருகேயுள்ள இரிஞாலக்குடா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இரு தினங்களுக்கு முன்பு பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்துக்கு வியர்க்க விறுவிறுக்கச் சென்றிருக்கிறார். காவலர்களிடம் தன்னை தொழிலதிபர் என அறிமுகம் செய்துவிட்டு தனக்கு நேர்ந்த கொடுமையைப் புகாராகக் கூறியுள்ளார். அந்தப் புகாரில், ``இன்ஸ்டாகிராம் மூலம் ஓர் இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இன்ஸ்டாவில் சாட் செய்த அந்த இளம்பெண், தன்னுடைய கணவர் துபாயில் இருப்பதாகவும், வீட்டில் உடல்நலம் சரியில்லாத தாயுடன் வசித்துவருவதாகவும் கூறியதுடன், `நீங்கள் வீட்டுக்கு வந்தால் நாம் இருவரும் தனிமையில் நெருக்கமாக, ஜாலியாக இருக்கலாம்’ என அழைத்தார். அதை நம்பி இளம்பெண் கொடுத்த முகவரியில் பாலக்காடு அருகேயுள்ள யாக்கரை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்கு எனது சொகுசு காரில் சென்றேன்.

பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டுக்குச் சென்றதும், இன்ஸ்டாகிராமில் என்னிடம் பழகிய இளம்பெண் மட்டும் இருந்தார். என்னை வரவேற்ற அந்தப் பெண் நேராகப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றார். அந்தச் சமயத்தில் திடீரென ஐந்து பேர் வீட்டுக்குள் புகுந்து என்னை மிரட்டி ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி வீடியோ, போட்டோக்கள் எடுத்தனர்.

கைதுக்கு முன்னும், கைதுக்குப் பின்னும் தேவு
கைதுக்கு முன்னும், கைதுக்குப் பின்னும் தேவு

எனது கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தங்க செயின், செல்போன், ஏ.டி.எம் கார்டு, கார், கையிலிருந்த பத்தாயிரம் ரூபாய் ஆகியவற்றையும் பறித்துவிட்டனர். என்னை நிர்வாணப்படுத்தி எடுத்த வீடியோவை வெளியிடாமலிருக்கக் கூடுதல் பணம் கேட்டு மிரட்டினார்கள். கொடுங்கல்லூரில் உள்ள என்னுடைய பிளாட்டில் பணம் இருப்பதாகக் கூறியதும் என்னை காரில் ஏற்றி கொடுங்கல்லூருக்கு அழைத்துச் சென்றனர். வழியில் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறி காரிலிருந்து இறங்கி தப்பி ஓடி காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறேன். அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துரிதமாகச் செயல்பட்ட போலீஸார், காரில் சென்ற அந்தக் கும்பலையும், தொழிலதிபர் கூறிய அந்த வீட்டில் இளம்பெண் உள்ளிட்டவர்களையும் கைதுசெய்தனர். விசாரணையில் கைதுசெய்யப்பட்ட இளம்பெண் கண்ணூரைச் சேர்ந்த கோகுல் தீப் (29) என்பவரின் மனைவி தேவு (24) எனத் தெரியவந்துள்ளது. கோகுலும் அந்தக் கும்பலில் இருந்திருக்கிறார். மேலும் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சரத், திருச்சூரைச் சேர்ந்த அஜித், வினய், ஜிஷ்ணு, இந்திரஜித், ரோஸித் ஆகிய எட்டுப் பேரைக் கைதுசெய்தனர். கணவன், மனைவியான கோகுல், தேவ் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் 'பீனிக்ஸ் கப்பிள்' என்ற பெயரில் ஆக்டிவாகச் செயல்பட்டுவந்துள்ளனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

கணவன் மனைவியான கோகுல், தேவ் ஆகியோர் சமூக வலைதளத்தில் தொழிலதிபர்களுக்கு வலை விரித்துப் பணம் பறிப்பது வாடிக்கை எனவும், இதற்காக அவர்கள் தொழிலதிபர்களை அடையாளம்காண டீமாகச் சேர்ந்து செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பற்றி போலீஸார் கூறுகையில், "இந்தக் கும்பலில் சரத் என்பவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். சரத் மீது கொள்ளை மற்றும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2018-ம் ஆண்டு மழைவெள்ள பிரளயத்தின்போது சரத்தின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்த சமயத்தில் அந்தத் தொழிலதிபர் உதவியிருக்கிறார். சந்தோஷத்துக்காக தொழிலதிபர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார் என்பதைப் புரிந்துகொண்ட சரத் அவரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளார்.

கோகுல்தீப் - தேவ்
கோகுல்தீப் - தேவ்

'பீனிக்ஸ் கப்பிள்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இயங்கும் கோகுல் தீப் - தேவு தம்பதியிடம் விவரத்தைக் கூறியுள்ளார். ஆடம்பர வாழ்வுக்குப் பணம் வேண்டும், அதற்காக எதுவும் செய்யலாம் என்ற கொள்கையுடைய தேவு, அதற்கு உடனே சம்மதித்திருக்கிறார். இதற்கு அவரின் கணவனும் உடந்தையாக இருந்திருக்கிறார். தொழிலதிபரிடம் இன்ஸ்டாகிராமில் சார்ட் செய்த தேவு அவரை பாலக்காட்டுக்கு அழைத்திருக்கிறார். பெண் விஷயம் என்பதால் பணத்தை இழக்கும் தொழிலதிபர்கள் போலீஸில் புகார் செய்ய மாட்டார்கள் என இவர்கள் நினைத்துள்ளனர். தொழிலதிபர்களை வீழ்த்த பாலக்காடு மற்றும் கொடுங்கல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறது இந்தக் கும்பல். இவர்களின் வலையில் வேறு தொழிலதிபர்கள் யாராவது விழுந்துள்ளனரா எனவும் விசாராணை நடத்திவருகிறோம்" என்றனர்.