Published:Updated:

டியூஷனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை! - கேரளாவில் ஆசிரியை கைது

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

கேரளாவில் 11-ம் வகுப்பு மாணவனைப் பாலியல் வன்கொடுமைசெய்த பெண் டியூஷன் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.

டியூஷனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை! - கேரளாவில் ஆசிரியை கைது

கேரளாவில் 11-ம் வகுப்பு மாணவனைப் பாலியல் வன்கொடுமைசெய்த பெண் டியூஷன் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மாணவன் 11-ம் வகுப்பு படித்துவந்தான். அவனது நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படவே, பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அணுகியிருக்கின்றனர். இதையடுத்து அவர்கள் அந்த மாணவனை மனநல ஆலோசனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

பாலியல் புகார்
பாலியல் புகார்

அங்குதான், அந்த மாணவன் தனக்கு நடந்த கொடுமையை விவரித்திருக்கிறான். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அந்த மாணவன் அருகிலுள்ள ஒரு பெண்ணிடம் தினசரி டியூஷன் சென்று வந்திருக்கிறான்.

அப்போது அந்தப் பெண் மாணவனுக்கு மதுபானம் கலந்துகொடுத்து, அவனைப் பலமுறை பாலியல் வன்கொடுமைசெய்திருக்கிறார். இதையடுத்து மாணவனின் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் மீது வழக்கு பதிந்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

மது
மது
pixabay

கணவரைப் பிரிந்து வாழும் அந்தப் பெண், ஜிம்மில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். கொரோனா காலகட்டத்திலிருந்து டியூஷனும் எடுத்துவருகிறார். பள்ளிகள் இயங்காத நேரத்தில், பெற்றோர் தங்கள் மகனை அந்தப் பெண்ணிடம் டியூஷன் அனுப்பியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே திருச்சூர் மாவட்டத்தில் மற்றோர் அதிர்ச்சி சம்பவமும் நடந்திருக்கிறது. இளைஞர் ஒருவர் தன் வீட்டருகே இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு, செல்போனில் ஆபாசப் படங்களை  காண்பித்து வந்திருக்கிறார்.

செல்போன்
செல்போன்

பிறகு சம்பவத்தை அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லவே, அவர்கள் போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆபாச வீடியோவைக் காண்பித்த சரித் என்ற இளைஞர்மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது.