Published:Updated:

`இரண்டாவது கணவரையும் கொல்ல திட்டம்போட்ட ஜோலி!’ - முதல்நாள் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜான்சன் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்ததாகவும். அதற்காகத் தன் இரண்டாவது கணவர் ஷாஜியையும் ஜான்சனின் மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஜோலி விசாரணையில் கூறியிருக்கிறார்.

ஜோலி
ஜோலி

கேரள மாநிலம் கோழிக்கோடு கூடத்தாயியைச் சேர்ந்த ஜோலி மட்டன் சூப்பிலும், உணவு போன்றவற்றிலும் சயனைடு கலந்து ஆறு பேரை கொலை செய்த வழக்கு பரபரப்பான கட்டத்துக்கு சென்றுள்ளது. போலீஸ் கஷ்டடியில் நேற்று நடந்த விசாரணையில் பல தகவல்களை ஜோலி தெரிவித்துள்ளார்.

கொலைச் செய்யப்பட்ட லிசி, அவரின் மகள்
கொலைச் செய்யப்பட்ட லிசி, அவரின் மகள்

தன் கணவன் ராய் தாமசுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவர் இறந்ததும் சயனைடு வாங்கிக்கொடுத்த மாத்யூவுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதுபோல உறவினரான மாத்யூ மஞ்சாடி என்பவருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இரண்டாவது கணவர் ஷாஜியின் மனைவி லிசியைக் கொலை செய்ய மாத்திரையில் விஷம் கலந்துகொடுத்ததாகக் கூறியுள்ளார். சிலியைக் கொலை செய்ய ஷாஜி உதவியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஷாஜி
ஷாஜி

மேலும் பி.எஸ்.என்.எல் அதிகாரியாக இருக்கும் ஜான்சன் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்ததாகவும், அதற்காகத் தன் இரண்டாவது கணவர் ஷாஜியையும் ஜான்சனின் மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஜோலி விசாரணையில் கூறியிருக்கிறார். மேலும், `என்னை ஏன் முதலிலே கைது செய்யவில்லை. அப்படிக் கைது செய்திருந்தால் நிறைய கொலைகள் நடந்திருக்காதே?' என விசாரணையின்போது ஜோலி போலீஸாரிடம் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜோலியின் வீட்டில் இருந்து இரண்டு பாட்டில்களும், 47 மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு குப்பி காலியாக இதுந்தது. அதில் சயனைடு கொண்டுவந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மற்றொரு பாட்டிலில் பிரவுன் கலரில் பவுடர் உள்ளது. இந்த இரண்டு குப்பிகளும் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜோலி
ஜோலி

கூடத்தாய் பகுதியில் நடந்த வேறு சில மரணங்களிலும் ஜோலிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக ஜோலியிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்காக கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா வடகர எஸ்.பி அலுவலகத்துக்கு வந்துள்ளார். இன்றைய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.