Published:Updated:

` காதலன் இறந்துவிட்டான், குழந்தையைக் கொன்றேன்!' - நள்ளிரவில் உதவி கேட்டுச் சிக்கிய கேரள மாணவி

ரேஷ்மா வாக்குமூலத்தை நம்பாத போலீஸார், குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.

குழந்தை
குழந்தை

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 20 வயது இளம்பெண் ரேஷ்மா (பெயர் மாற்றம்). கட்டப்பனையில் உள்ள அரசுக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த வாரம் புதன்கிழமை தனது கல்லூரி தோழியைத் தொடர்புகொண்ட ரேஷ்மா, ``எனக்குக் குழந்தை பிறந்து இறந்துவிட்டது... வீட்டுக்குத் தெரியாது. குழந்தையை பேக்கில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கிறேன். குழந்தையை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும்" என்று கேட்டுள்ளார். முதலில், ரேஷ்மா கூறுவதை நம்ப மறுத்த தோழி, குழந்தையின் புகைப்படத்தைக் கேட்டுள்ளார்.

பேக்
பேக்

பின்னர், இறந்த குழந்தையின் புகைப்படத்தை ரேஷ்மா வாட்ஸ்அப்பில் அனுப்பவே, அதிர்ச்சியடைந்தவர், இதுதொடர்பாக போலீஸுக்கும் ரேஷ்மாவின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், பேக்கில் பாலிதீன் பையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கைப்பற்றியதுடன், இளம்பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன.

கட்டடப் பணிக்குச் சென்ற தாய் -தனியாக வீட்டிலிருந்த சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

முதலில் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண், கல்லூரியில் தன்னுடன் படித்த இளைஞரைக் காதலித்ததாகவும் இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பம் ஆனதாகவும் கூறியிருந்தார். மேலும், காதலன் தற்கொலை செய்துகொண்டதால் கர்ப்பம் ஆனதை வீட்டில் மறைத்துள்ளார். 6 மாதம் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை பிறந்துவிட்டது. வீட்டின் பாத்ரூமில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதால், பேக்கில் மறைத்துவைத்தேன்" என வாக்குமூலம் கொடுத்தார். இதற்கிடையே, ரேஷ்மாவின் வாக்குமூலத்தை நம்பாத போலீஸார், குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.

குழந்தை சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாலிதீன் பை
குழந்தை சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாலிதீன் பை

கோட்டயம் மெடிக்கல் கல்லூரியில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தற்போது அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், குழந்தையின் உடலில் பால் இருந்ததும், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், குழந்தையின் கழுத்தை நெறித்ததற்கான அடையாளமும் இருக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து மீண்டும் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசிக் கொலை செய்த தாய்! - கடலூர் அருகே அதிர்ச்சி

இந்த முறை விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் அவர். மேலும், ``திருமணம் ஆகாத எனக்குக் குழந்தை பிறந்தது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே குழந்தையைக் கொலை செய்தேன். குழந்தை பிறந்த பிறகு பால் கொடுத்துவிட்டு துணியால் இறுக்கிக் கொன்றேன். பிறகு, இரவு நேரத்தில் எங்காவது குழந்தையை வீசிவிடலாம் என்று நினைத்து பேக்கில் வைத்தேன். இதற்காக நண்பரின் உதவியைக் கேட்டேன், இப்படி மாட்டிக்கொண்டேன்" என அப்பெண் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ரேஷ்மா கர்ப்பமாக இருந்தது தெரிந்து, காதலன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Crime
Crime

இதனால், குழந்தையைக் கலைக்க முடியாமல் யாருக்கும் தெரியாமல் மறைத்துவந்துள்ளார். கல்லூரியில் தேர்வுக்காலம் என்பதால், அடிக்கடி வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதையும் மீறி கல்லூரிக்குச் செல்ல நேர்ந்ததால், வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு வெளியே சென்றுவந்தவர், குழந்தையைக் கொன்று தற்போது சிக்கிக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 2 நாள்களே ஆன குழந்தையைக் கொன்று புதைத்தது ஏன்? - தாய் அதிர்ச்சி வாக்குமூலம்