Published:Updated:

‘செப்டிக் அருகே குழி.. அம்மாவின் சடலம்.. மாயமான தந்தை’- சிறுவன் சொன்ன தகவலால் வெளிவந்த உண்மை

Representation Image
Representation Image

கேரளாவில் கணவனே மனைவியைக் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷினி என்ற பெண்ணின் உடல் அவரது வீட்டின் செப்டிக் டேங்க் அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஷினியின் கணவர் குட்டனை கடந்த இரண்டு நாள்களாகக் காணவில்லை. அவர்களது குழந்தைகள் இருவரும் உறவினருக்கு அளித்த தகவலின் பேரில் ஷினியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உடலைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில்தான் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவரும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குட்டனைத் தேடி வருகின்றனர்.

Representation Image
Representation Image

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``குட்டன் - ஷினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வெஞ்சாராமுடு பகுதியில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். அந்தப் பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் அலுவலகத்துக்கு வேலைக்குச் செல்வது பிடிக்காமல் அவரது தலைமுடியைக் கத்தரித்துள்ளார்.

’வேன் டிரைவருடன் கூட்டுச் சேர்ந்த 6 பேர்.. சிறுமிக்கு நேர்ந்த துயரம்!’- மத்தியப்பிரதேச அதிர்ச்சி

கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. குடித்திருந்த குட்டன் தன் மனைவியைத் தாக்கியுள்ளார். அம்மா அடிவாங்குவதைப் பார்த்த அவரது மூத்த மகன் தடுக்கச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த மூத்த மகனைக் குச்சியைக் கொண்டு வெளியே செல்லுமாறு மிரட்டியுள்ளார். தந்தைக்குப் பயந்து அந்தச் சிறுவனும் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் மாலை அந்தச் சிறுவன் வீடு திரும்பிய போது அவரது அம்மாவைக் காணவில்லை. அப்போது தன் தந்தையிடம் கேட்டதற்கு அம்மா உறவினர் வீட்டுக்குச் சென்றதாக குட்டன் பதில் அளித்துள்ளார்.

Representation Image
Representation Image

கடந்த செவ்வாய்கிழமை வரை அந்தப்பெண் வீடு திரும்பவில்லை. செவ்வாய்கிழமை முதலே குட்டனையும் காணவில்லை. அருகில் வசிக்கும் தன் மாமாவிடம் சிறுவர்கள் சென்று விவரத்தைக் கூறியுள்ளனர். ஷினியின் சகோதரர் விசாரிக்கும்போது வீட்டுக்கு அருகில் உள்ள குழியில் அம்மாவைப் போட்டு மண்ணைக் கொண்டு மூடியதாக ஷினியின் இளைய மகன் கூறியுள்ளான். இதையடுத்து அங்கே சென்று பார்த்தபோது செப்டிக் டேக் அருகில் குழி வெட்டப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்து ஷினியின் உடலை மீட்டுள்ளோம். சிறுவன் கூறியதையடுத்தே ஷினியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குட்டனைத் தேடி வருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு