Published:Updated:

டீ-யில் எலி மருந்து கலந்து தாயைக் கொன்ற மகள் - 14 சென்ட் நிலத்துக்காக கூகுளில் ஐடியா தேடிய கொடூரம்!

கைதுசெய்யப்பட்ட இந்துலேகா - ருக்மணி

`இந்துலேகாவின் செல்போனை சோதனை செய்ததில் 'விஷம் கொடுத்து எப்படிக் கொலைசெய்யலாம்' என கூகுளில் தேடியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். பெற்றோரைக் கொல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே 20 டோலோ மாத்திரைகளை வாங்கிவைத்திருக்கிறார்’ என்கிறது போலீஸ்.

டீ-யில் எலி மருந்து கலந்து தாயைக் கொன்ற மகள் - 14 சென்ட் நிலத்துக்காக கூகுளில் ஐடியா தேடிய கொடூரம்!

`இந்துலேகாவின் செல்போனை சோதனை செய்ததில் 'விஷம் கொடுத்து எப்படிக் கொலைசெய்யலாம்' என கூகுளில் தேடியிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். பெற்றோரைக் கொல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே 20 டோலோ மாத்திரைகளை வாங்கிவைத்திருக்கிறார்’ என்கிறது போலீஸ்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட இந்துலேகா - ருக்மணி

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குன்னங்குளம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி ருக்மணி (58). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் இந்துலேகா (36) இவர்களுடன் வசித்துவருகிறார். இந்துலேகாவின் கணவர் துபாயில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் இந்துலேகா கணவனுக்குத் தெரியாமல் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் கணவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதாகக் கூறியதை அடுத்து கடனை உடனடியாக அடைக்க முடிவு செய்தார். ஆனால் கையில் பணம் இல்லாததால் பெற்றோர் பெயரிலுள்ள வீடு மற்றும் 14 சென்ட் நிலத்தை சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி, பின்னர் சொத்தை விற்று கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறார். நிலத்தை இந்துலேகா பெயருக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பெற்றோரைத் தீர்த்துக்கட்டிவிட்டு சொத்தைத் தனது பெயருக்கு மாற்ற கொடூர திட்டமிட்டார் இந்துலேகா.

தாயைக் கொலை செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட இந்துலேகா
தாயைக் கொலை செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட இந்துலேகா

கடந்த 17-ம் தேதி தாய், தந்தைக்கு டீயில் எலியைக் கொல்லும் மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்திருக்கிறார். தாய் ருக்மிணி டீயைக் குடித்திருக்கிறார். ஆனால், சுவையில் மாற்றம் தெரிந்ததால் தந்தை சந்திரன் டீ குடிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி ருக்மிணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே குன்னங்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தாயை ச்சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார் இந்துலேகா. ஆனாலும் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கடந்த 23-ம் தேதி ருக்மிணி இறந்துபோனார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேசமயம் மருத்துவர்களுக்குச் சந்தேகம் ஏறட்டதைத் தொடர்ந்து ருக்மிணியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரின் உடலுக்குள் விஷம் சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி மருத்துவமனையிலிருந்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இந்துலேகாவின் தந்தையிடம் விசாரணை நடத்தியபோது, மகள் கொடுத்த டீயின் சுவையில் மாற்றம் தெரிந்தது பற்றியும், வீட்டில் பூச்சி மருந்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் இந்துலேகாவை விசாரித்தினர். அதில் 14 சென்ட் நிலத்துக்காக பெற்றோருக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்ததை இந்துலேகா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இந்துலேகா
இந்துலேகா

இது பற்றி போலீஸார் கூறுகையில், ``இந்துலேகாவின் செல்போனை சோதனை செய்ததில் 'விஷம் கொடுத்து எப்படிக் கொலைசெய்யலாம்' என கூகுளில் தேடியிருந்ததைக் கண்டுபிடிதிருக்கிறோம். பெற்றோரைக் கொல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே 20 டோலோ மாத்திரைகளை வாங்கி வைத்திருக்கிறார். தாயைக் கொலைசெய்யப் பயன்படுத்தியது போக மீதமுள்ள எலி விஷத்தையும், விஷம் கொடுக்கப் பயன்படுத்திய பாத்திரத்தையும் கைப்பற்றியிருக்கிறோம். சிகிச்சையில் இருந்த ருக்மிணியிடம் உடலில் விஷம் ஏதாவது சென்றதா என மருத்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். இது பற்றி மகள் இந்துலேகாவிடம் கேட்டிருக்கிறார் தாய் ருக்மிணி. 'மரணப் படுக்கையில் கிடக்கும்போது இப்படியெல்லாம் பேசாதீங்க' என இந்துலேகா கூறியிருக்கிறார். தாய் மருத்துவமனையில் இருக்கும்போது தந்தையிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து அதை வெளியே வீசிவிடுமாறு கூறியிருக்கிறார் இந்துலேகா.

`அதில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டதற்கு `எலி விஷம்’ என்று சொல்லியிருக்கிறார். `இது எங்கிருந்து வந்தது?’ எனத் தந்தை கேட்டதற்கு, `எலித் தொல்லையால் நான்தான் வாங்கினேன்’ என்று சொல்லியிருக்கிறார். இப்போது இந்துலேகாவின் கணவர் ஊருக்கு வந்திருக்கிறார். இந்துலேகா எதற்காகக் கடன் வாங்கினார் என்பது பற்றியும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.