Published:Updated:

கேரள பெண் பாலியல் புகார்: பழனி போலீஸை சுற்றும் சர்ச்சை! - நடந்தது என்ன?

பழனி
பழனி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

பெண் ஒருவர், கடந்த 19 - ஆம் தேதி தானும், தனது கணவரும் பழனி முருகன் கோயிலுக்கு சென்றதாகவும், அப்போது தனது கணவர் இல்லாத சமயம் பார்த்து 3 பேர் தன்னை கடத்திச் சென்று தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் பழனி பகுதியில் தன்னை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்துள்ள புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதொடர்பாக தான் கொடுத்த புகாரை பழனி போலீஸார் கண்டுக்கொள்ளவில்லை என்று அந்த பெண் கூறியுள்ள குற்றச்சாட்டு, பழனி போலீஸாரை அதிர வைத்துள்ளது.

 பழனி மலையடிவார காவல் நிலையம்
பழனி மலையடிவார காவல் நிலையம்
ஈ.ஜெ.நந்தகுமார்

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நோயாளியாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை அங்கிருந்த மருத்துவர்கள் விசாரித்தபோது, பழனி கோயிலுக்கு கணவருடன் சென்ற தன்னை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அதைதொடர்ந்து, மருத்துவர்கள் மூலம் அங்குள்ள போலீஸார் கவனத்துக்கு விவகாரம் போக, அவர்கள் வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அந்த பெண், கடந்த 19 - ஆம் தேதி தானும், தனது கணவரும் பழனி முருகன் கோயிலுக்கு சென்றதாகவும், அப்போது தனது கணவர் இல்லாத சமயம் பார்த்து மூன்று பேர் தன்னை கடத்திச் சென்று தனியார் விடுதியில் வைத்து இரவு முழுவதும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியிருக்கிறார். மறுநாள் காலை அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண், தனது கணவருடன் சேர்ந்து பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முற்பட்டபோது, அங்கிருந்த போலீஸார் தனது புகாரை வாங்க மறுத்தததாகவும் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து அந்த பெண் தளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

 பழனி
பழனி
ஈ.ஜெ.நந்தகுமார்

அவரது புகாரை பெற்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த கேரள டி.ஜி.பி அனில்குமார், பழனி காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை பரபரப்பானது. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா, பழனி டி.எஸ்.பிக்கு அலுவலகத்துக்குச் சென்று விசாரணையை மேற்கொண்டார். பாலியல் வதை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பழனிமலை அடிவாரப் பகுதியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோரிடம் எஸ்.பி நேரில் விசாரணை நடத்தினார்.

கரூர்: 'பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பா.ஜ.க-வினர்!' - கடுகடுத்த ஆட்சியர்

அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தரப்பில் வாட்ஸ்அப் மூலம் கொடுத்த புகாரின் பேரில், கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி ரவளிப்பிரியா, "கேரளப் பெண் கொடுத்த புகாரை அடுத்து, பழனி மலையடிவார காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். அந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கிறோம். ஒரு பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த பெண் சொன்ன நேரத்தில் எல்லாம் சி.சி.டி.வி ஃபுட்டேஜ் எடுக்கப்படுவதற்கு, சி.டி.ஆர் அனாலிசிஸ் பண்றதுக்கு, ஐ விட்னஸ்களோட ஸ்டேட்மென்ட்களை ரெக்கார்டு பண்றதுக்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை தீவிரமா நடந்துகிட்டு இருக்கு. இதை எல்லாவற்றையும் நான் மானிட்டர் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். முதல்கட்ட விசாரணையில், 19 - ஆம் தேதி கம்ப்ளைன்ட் பண்ணின தர்மராஜோடு ஒரு லேடியும் வந்திருக்காங்க. அவங்க லாட்ஜ் ரூம்ல் செக் இன் பண்ணியிருக்காங்க.

ரவளிப்பிரியா (திண்டுக்கல் எஸ்.பி)
ரவளிப்பிரியா (திண்டுக்கல் எஸ்.பி)
ஈ.ஜெ.நந்தகுமார்

ஐ விட்னஸ் விசாரணையில் அவங்க மதுபோதையில் பிரச்னை பண்ணி, லாட்ஜில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சொல்றாங்க. அதேபோல், 21, 22 ஆகிய தேதிகளில் தர்மராஜ் மதுபோதையில் பழனி நகரில் சுற்றித் திரிந்ததாகவும் தெரிகிறது. பழனி மலையடிவார காவல் நிலையத்தில் விசாரித்தபோது, தர்மராஜ் சொல்வதுபோல், அவர்கள் கொடுத்த புகாரை காவல் துறை வாங்க மறுத்து அனுப்பி வைத்ததாக சொல்வதுபோன்ற சம்பவங்கள் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது. இது உண்மையா என்று கண்டுபிடிக்கும் விசாரணை போய்கிட்டு இருக்கு. கேரள காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வழக்கு கோப்பு விசாரணைக்காக ஓரிரு தினங்களில் தமிழக காவல் துறையினர் ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது. அதை வைத்தும், சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டும் முறையாக அறிவியல்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

க்ரைம் டேப்ஸ்: 50 கொலை, பாலியல் வன்கொடுமை; தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம் | பகுதி 1

இந்த நிலையில், கேரள பெண்ணுக்கு சார்பாக பலரும் குரல் எழுப்பி வருகிறார். டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் புனித தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு