Published:Updated:

கொடைக்கானல்: புத்தாண்டு கொண்டாட்டம்; போதைக் காளான் தேடி காட்டில் சிக்கிய இளைஞர்கள் - நடந்தது என்ன?

கொடைக்கானல்

கொடைக்கானல் மலையில் கிடைக்கக்கூடிய போதைக் காளான்களை ருசிப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் படையெடுக்கின்றனர்.

கொடைக்கானல்: புத்தாண்டு கொண்டாட்டம்; போதைக் காளான் தேடி காட்டில் சிக்கிய இளைஞர்கள் - நடந்தது என்ன?

கொடைக்கானல் மலையில் கிடைக்கக்கூடிய போதைக் காளான்களை ருசிப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் படையெடுக்கின்றனர்.

Published:Updated:
கொடைக்கானல்

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும்​​ கொடைக்கான​ல் மலையின் இயற்கை அழகையும், இதமான குளிரையும் ரசிக்க கோடைக்காலம் மட்டுமல்லாது அனைத்துக் காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டிருக்கின்றனர். அதே வேளையில் கொடைக்கானல் மலையில் கிடைக்கக்கூடிய போதைக் காளான்களை ருசிப்பதற்காகவும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் படையெடுக்கின்றனர். 

காட்டுக் காளான்
காட்டுக் காளான்
ஃபைல் படம்

​அந்த வகையில், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகக் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலிருந்து ஐந்து ​இளைஞர்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்​. அவர்களில் இரண்டு இளைஞர்கள் வனப்பகுதிக்குள் சிக்கி மூன்று நாள்களுக்குப் பிறகு தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணியிலிருந்தவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து கொடைக்கானல் போலீஸாரிடம் விசாரித்தோம். "புத்தாண்டு தினத்தன்று கொடைக்கானலில் தங்கியிருந்தவர்கள் மறுநாள் போதைக் காளான்களைத் தேடி ​கொடைக்கானலிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில்,​ ​பூண்டி அருகேயுள்ள வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு போதைக் காளான்களை 3000 முதல் 5000 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர்.​​ ​​ 

அன்றைய தினம் பூண்டி பகுதியிலேயே தங்கிய அவர்கள், மீண்டும் போதைக் காளான்களைப் பணம் கொடுத்து வாங்க விரும்பாமல் வனப்பகுதிக்குள் காளான்களைத் தேடிச் சென்றுள்ளனர். இந்த ஐந்து​ பே​ரில் இரண்டு பேர் ஒரு பிரிவாகவும், மூன்று பேர் ஒரு பிரிவாகவும் பிரிந்து போதைக் காளான் பறிப்பதற்காகச் சென்​றுள்ளனர். ​சில​ ​மணி நேரங்களுக்குப் பிறகு மூவராகச் சென்ற கூட்டம் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தடைந்தனர்​. ​அப்போது அல்தாப் ​(26)​, ஆசிப் ​(23)​ ஆகியோர் மட்டும் திரும்பவில்லை. அவர்களின் போனுக்கு அழைத்தபோதும் லைன் கிடைக்கவில்லை. இரவுவரை காத்திருந்து அவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தும் வ​ரவில்லை. அதையடுத்து, அப்பகுதியினரிடம் கூறி தேடியுள்ளனர். 

கொடைக்கானல்
கொடைக்கானல்

​வனப்பகுதிக்குள் கிராம மக்கள் உதவியுடன் ஏராளமானோர் சென்று தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை​. இதற்கிடையில், தீ தடுப்புக் கோடுகள் போடும் பணிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் நடைபெற்றுவருகிறது. ​அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சத்தம் கேட்​டு, அந்த இளைஞர்கள் அவர்களை நோக்கிச் சென்று தாங்கள் காட்டுக்குள் சிக்கிய தகவலைக் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் காப்பாற்றிய பணியாளர்கள் பூண்டி கிராமத்துக்கு அழைத்துவந்து​ள்ளனர். அந்த இளைஞர்கள் சுமார் மூன்று நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கின்றனர்" என்றனர்.

​​வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்றதற்கும், போதைக் காளான் பயன்படுத்தியதற்கும் இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், போலீஸார் அவர்களை விடுவித்தது சரியா​ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.