Published:Updated:

`கைகொடுத்த காரின் வாசகம்.. விறுவிறு சேஸிங்..'- 7 நிமிடத்தில் கடத்தப்பட்ட இளைஞரை மீட்ட போலீஸ்!

கடத்தப்பட்ட இளைஞரை 7 நிமிடத்தில் மீட்டு பாராட்டை அள்ளியுள்ளனர் டெல்லி போலீஸார்!

போலீஸ்
போலீஸ்

டெல்லி மோகன்கார்டன் பகுதியில் இன்று சிம்லாவைச் சேர்ந்த ரிஜ்வால் மற்றும் அவரது சகோதரர் தங்களது காரில் இருந்துள்ளனர். அப்போது அங்கு மூன்றுபேர் கொண்ட கும்பல் திடீரென ரிஜ்வாலை மட்டும் காரில் கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். உடன் இருந்த சகோதரர் இந்தத் தகவலை போலீஸுக்கு போனில் தெரிவித்துள்ளார். அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் உடனடியாக செயல்பட்டுள்ளனர்.

Kidnapping
Kidnapping

அதன்படி 7 நிமிடத்தில் ரிஜ்வாலை மீட்டதுடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். இளைஞரை 7 நிமிடத்தில் மீட்டது குறித்து பேசியுள்ள டெல்லி போலீஸார், ``ரிஜ்வாலை மூன்று பேர் கும்பல் கடத்தியதுடன் அவரின் சகோதரர் எங்களுக்கு தகவல் சொன்னார். கடத்தப்பட்ட காரில் இருந்த `ஹை லேண்டர்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததையும் அவர் சொல்லியிருந்தார். இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன்மூலமாகவே 7 நிமிடத்தில் குற்றவாளிகளை பிடிக்க முடிந்தது.

`காலில் விழுந்து கெஞ்சினார்; காதுகொடுத்து கேட்கல!'- மகன் கண்முன்னே தந்தையை அடித்துக்கொன்ற போலீஸ்

கன்ட்ரோல் ரூமுக்கு இந்தத் தகவலைச் சொல்லி இந்த வாசகம் உடைய கார் கேமராக்களில் உலவுகிறாதா என்பதை பார்த்தோம். அதன்படியே கார் உத்தம்நகர் சிக்னலில் நின்றுகொண்டிருப்பதை கண்டுபிடித்தோம். நாங்கள் செல்வதற்குள் கடத்தல்காரர்கள் இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். இருந்தாலும் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்ததுடன் ரிஜ்வாலை உடனடியாக மீட்டோம். ரிஜ்வாலிடம் இருந்து கடத்தல்காரர்களின் பறித்த 1,650 ரூபாயையும், அவரின் காரையும் மீட்டுள்ளோம்.

மீட்கப்பட்ட கார்
மீட்கப்பட்ட கார்

பிடிபட்டவனின் பெயர் ரவி என்பதும், அவன் உத்தம்நகர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ளோம். எதற்காக கடத்தினார்கள், தப்பியோடியவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணைக்கு பிறகு தெரியவரும்" என்றனர். டெல்லியின் பிரதான பகுதியில் நடந்த இந்தக் கடத்தல் சம்பவமும்.. அவரை மீட்டெடுக்க நடந்த சேஸிங்கும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 மாதமாகத் தேடல்;முருகன் கும்பல் சிக்கியது!-  மொட்டைபோட்டு நேர்த்திக்கடன் செலுத்திய திருச்சி போலீஸ்