Published:Updated:

`நீ சொன்னதைப் போலவே கூப்பிட்டு வந்துவிட்டேன்!'- தவறான நட்பால் டிரைவருக்கு நேர்ந்த சோகம்

மாரிமுத்து
மாரிமுத்து ( எம். விஜயகுமார் )

கோவிந்தராஜ் மாரிமுத்துவைக் கொலை செய்வதற்காகத் திட்டம் போட்டுள்ளார். இதற்காக மாரிமுத்துவின் நண்பன் கேசவனின் உதவியையும் நாடியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணனின் மகன் மாரிமுத்து. வயது 30. வேன் டிரைவரான இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறையில் வீட்டில் இருந்தவர் நேற்று காலை அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈஸ்வரியின் கணவர் தீர்த்த செல்வனுக்குத் தெரிய வந்ததையடுத்து மாரிமுத்துவைக் கண்டித்துள்ளார்.

அதையடுத்து, கிருஷ்ணகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாரிமுத்து உடலை மீட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவுக்கும் கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தீர்த்தசெல்வனின் மனைவி ஈஸ்வரி என்பவருக்கும் தவறான பழக்கம் இருந்துவந்துள்ளது.

இது ஈஸ்வரியின் கணவர் தீர்த்தசெல்வனுக்குத் தெரிய வந்ததையடுத்து மாரிமுத்துவைக் கண்டித்துள்ளார். ஆனாலும் மாரிமுத்தும் ஈஸ்வரியும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் தீர்த்தசெல்வனுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தவே அவருடைய நண்பரான கொடியூரைச் சேர்ந்த கோவிந்தராஜிடம் கூறி வேதனை அடைந்துள்ளார்.

இதனால் கோவிந்தராஜ் மாரிமுத்துவைக் கொலை செய்வதற்காகத் திட்டம் போட்டுள்ளார். இதற்காக மாரிமுத்துவின் நண்பன் கேசவனின் உதவியையும் நாடியுள்ளார். அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஏரிக்கரைக்கு கேசவன், மாரிமுத்து மற்றும் அவருடைய மாமா எல்லப்பன், மாரிமுத்துவின் நண்பர் ராஜ்குமார் ஆகிய 4 பேரும் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தியிருக்கிறார்கள்.

Crime
Crime

அப்போது அந்த இடத்துக்கு வந்த கோவிந்தராஜ், மாரிமுத்துவிடம் ஈஸ்வரியுடனான பழக்கம் குறித்து கேட்டு தகராறு செய்ய அது சண்டையாக மாறியது. அப்போது எல்லப்பனும், ராஜ்குமாரும் சண்டையை விலக்கிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்கள். பின்னர் அந்த இடத்தில் மாரிமுத்து, கோவிந்தராஜ், கேசவன் 3 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.

கேசவன் கோவிந்தராஜிடம், `நீ சொன்னதைப் போலவே மாரிமுத்துவை கூட்டி வந்துவிட்டேன். அவன் கதையை முடித்து விடு' என்று கூறி இருக்கிறார். அதையடுத்து, கோவிந்தராஜ் மது போதையில் இருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு போட்டு கொலை செய்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மாரிமுத்து இறந்துவிட்டார். இது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து ஈஸ்வரியின் கணவர் தீர்த்தசெல்வன், கோவிந்தராஜ், கேசவன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின் செல்ல