Published:Updated:

கொடநாடு வழக்கு: சீல் வைக்கப்பட்ட உறையில் ரகசிய நிலையறிக்கை! ஊட்டி கோர்ட்டில் நடந்தது என்ன?

நான்கு வாரங்களுக்குப் பிறகு கொடநாடு வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. கூடுதல் விசாரணையைத் தொடர்ந்து நடத்த அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதோடு, கூடுதல் விசாரணையின் நிலையறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து ரகசியத் தாக்கல் செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக இந்த குற்றச் சம்பவம் நடத்தப்பட்டதாகச் சர்ச்சைகள் எழுந்தன.

கொடநாடு: சயானிடம் 2 மணி நேரம்; சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் 2 நாள்கள்! - விசாரணையில் நடந்தது என்ன?
கொடநாடு எஸ்டேட்டில் நோட்டீஸ்
கொடநாடு எஸ்டேட்டில் நோட்டீஸ்
கே.அருண்

கிட்டத்தட்ட தீர்ப்பு வழங்கும் நிலைக்கு எட்டிய இந்த வழக்கில் தற்போது கூடுதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கிய புலன் விசாரணை ஒரு மாதத்துக்கும் மேலாக பரபரப்புடன் நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 2-ம் தேதி இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. கூடுதல் விசாரணைக்கு நான்கு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் விசாரணையைத் தொடர்ந்து நடத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஆமோதித்த நீதிபதி சஞ்சய் பாபா இந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இன்று நடந்த விவாதம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட கொடநாடு வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ஷாஜகான், ``இந்த புலன் விசாரணையில் தற்போது வரை 34 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கேரளாவில் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. கேரளாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதால் தற்போதைக்கு அது சாத்தியம் இல்லை. எலெக்ட்ரானிக் ஆதாரங்களையும் ஆராய வேண்டியிருக்கிறது.அதற்கான அவகாசத்தையும் நீதிமன்றத்தில் கேட்டோம். இதை ஏற்றுக்கொண்டு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்"என்றார்.

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், ``இன்றைக்கு வாளையார் மனோஜ், சயான் இருவரும் ஆஜராகினர். கொரோனா காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் மேலும் சிலர் ஆஜராகவில்லை என்பதை தெரிவித்தோம். அரசுத் தரப்பில் சீலிடப்பட்ட உறையில் ரகசிய நிலையறிக்கை தாக்கல் செய்யப்பட்டது"என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு