Published:Updated:

விசாரணை வளையத்தில் கேரளக் குற்றவாளிகள்... சிக்குவார்களா அரசியல்புள்ளிகள்?!-பரபரக்கும் கொடநாடு வழக்கு

கொடநாடு
News
கொடநாடு

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. ஜெயலலிதா இருந்தவரை பவர் சென்ட்டராக இருந்த கொடநாட்டில், அவர் மறைந்த பிறகு நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் கனகராஜ், சயான் ஆகியோருக்கு அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது.

கொடநாடு
கொடநாடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில், கனகராஜ், சயானின் மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதேபோல, கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவந்த தினேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதைச் செய்ததாக சயான் உள்ளிட்டோர் கூறினர். அதிமுக ஆட்சியில் முடிந்தபோன வழக்கை, திமுக ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணை தொடங்கினர். தொடர்ந்து கனகராஜ் சகோதரர்கள் தனபாலும் ரமேஷும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான பலரிடம் போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலா அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தற்போது கேரளக் குற்றவாளிகளிடம் விசாரணை தொடங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3-வது குற்றவாளி திபு (A3 ), 5-வது குற்றவாளி ஜம்சீர் அலி (A4), 5-வது குற்றவாளி சதீசன் (A5), 6-வது குற்றவாளி பிஜின் குட்டி (A6), 10-வது குற்றவாளி ஜித்தின் ஜாய் (A10) ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். திபுவிடம் நேற்று முன்தினம் முதலே விசாரணை நடத்திவருகின்றனர்.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கடந்த ஆண்டு இவர்களிடம், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் பேரம் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அதேபோல, கனகராஜின் சகோதரர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக அரசியல்புள்ளிகளிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.