Published:Updated:

கொடநாடு கொலை, கொள்ளை: கர்நாடகாவுக்குத் தகவல் பரிமாற்றம்... விரிவடையும் விசாரணை வளையம்!

கொடநாடு வழக்கு

கொடநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்த சமயத்தில் கர்நாடக மாநிலத்துக்குத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த மாநில காவல்துறையின் உதவியைக் கேட்க தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை: கர்நாடகாவுக்குத் தகவல் பரிமாற்றம்... விரிவடையும் விசாரணை வளையம்!

கொடநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்த சமயத்தில் கர்நாடக மாநிலத்துக்குத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த மாநில காவல்துறையின் உதவியைக் கேட்க தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

Published:Updated:
கொடநாடு வழக்கு

அடுத்தடுத்த திடீர் பரபரப்புத் திருப்பங்களைச் சந்தித்துவந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுதல் புலன்விசாரணை கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. சாட்சி விசாரணைகள் முடிந்து கிட்டத்தட்ட தீர்ப்பை எட்டும் நிலையில் இருந்த இந்த வழக்கை கையில் எடுத்த தற்போதைய அரசு, கூடுதல் விசாரணையை ஆரம்பித்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட 10 நபர்களில் சயான், வாளையார் மனோஜ், சதீசன், உதயகுமார், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜித்தின் ராய், பிஜின் ஆகிய ஒன்பது பேர் ஆஜராகினர். கூடுதல் விசாரணையைத் தொடர மேலும் கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பில் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீதர், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை குறித்துத் தெரிவித்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர், ``இந்த வழக்கில் தற்போது வரை 257 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கேரளாவுக்குச் சென்று சயானின் வாகன விபத்து குறித்து விசாரிக்கவேண்டியிருக்கிறது.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்த சமயத்தில் கர்நாடக மாநிலத்துக்குத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்க அந்த மாநில காவல்துறையின் உதவியைக் கேட்க தனிப்படை போலீஸார் முடிவுசெய்துள்ளனர். விசாரணை தொடரும்" என்றனர்.