Published:Updated:

`ஸ்கெட்ச் போட்ட மனைவி; அபுதாபியில் இருந்துவந்த காதலன்'- கொல்கத்தா அதிகாரி கொலையில் திடுக் திருப்பம்!

காதலுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு அதை விபத்துபோல் சித்திரிக்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை
கொலை

பீகாரை சேர்ந்த நிர்மல் குமாருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். நவம்பர் 10-ம் தேதி நள்ளிரவில் ராய் நகருக்கு அருகில் இருந்த கால்வாயில் நிர்மல் குமார் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நிர்மல் கால்வாயில் இறந்து கிடப்பதை அவரின் மனைவி சோனாலிதான் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நிர்மல் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 கொலை
கொலை

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் என் கணவர் மதுபோதையில் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்திருக்கலாம் என அவரின் மனைவி கூறியிருந்தார். நிர்மல் குமாரின் மரணம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நிர்மல் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அவரது உடலில் சில காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை செய்தபோது நைலான் கயிறு ஒன்றையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

`நள்ளிரவில் மாணவிக்கு மெசேஜ்... சிக்கிய பேராசிரியர்!'- ஆளுநர் எடுத்த அதிரடி நடவடிக்கை

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அவரின் மனைவி சோனாலி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது போன்கால் விவரங்களைச் சேகரித்தனர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நபருடன் சோனாலி தொடர்ந்து போனில் பேசியது தெரியவந்தது. அவரைப் பற்றிக் கேட்டதற்கு சோனாலியிடம் இருந்து சரியான பதில் இல்லை. போலீஸாரின் தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவலை சோனாலி தெரிவித்துள்ளார். தன் ஆண் நண்பர் ஜமீலுடன் சேர்த்து நிர்மலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

`ஸ்கெட்ச் போட்ட மனைவி; அபுதாபியில் இருந்துவந்த காதலன்'- கொல்கத்தா அதிகாரி கொலையில் திடுக் திருப்பம்!

இதுகுறித்துப் பேசிய டைமண்ட் ஹார்பர் காவல்துறை அதிகாரிகள், ``சோனாலி, ஜமீல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு சோனாலி குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சோனாலியின் விருப்பத்துக்கு மாறாக நிர்மல் குமாருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். குடும்பத்தின் பேச்சை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நிர்மல் குமாரைத் திருமணம் செய்துள்ளார். ஆனால், ஜமீலுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இருவரும் போன் மூலம் தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

நிர்மல் குமாருக்குத் தன் மனைவியின் நடந்தையில் எந்தச் சந்தேகமும் எழவில்லை. திருமண வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. இவர்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. பீகாரிலிருந்து பணிமாறுதல் காரணமாக நிர்மல் குமார் கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். டைமண்ட் ஹார்பர் ரயில் நிலையத்தில் பணி என்பதால் அருகில் உள்ள ராய் நகரில் இரண்டு அறைகொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து தனியே தங்கியுள்ளார்.

`கயிறு எங்கிருந்து கிடைத்தது?' - கேரள மாணவி ஃபாத்திமா தற்கொலையில் தந்தை சந்தேகம்!

பீகார் சென்ற நிர்மல் குமார் மனைவியின் மொபைல் போனை எதேச்சையாக எடுத்துப் பார்த்துள்ளார். ஜமீலுடன் அவர் வாட்ஸ் அப்பில் பேசியது தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் சாட்டில் இருவரும் பேசியதை நிர்மல் பார்த்துள்ளார். மனைவியைக் கண்டித்தவர், இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டும் எனக் கூறி தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

சோனாலி, ஒன்றரை வயது குழந்தை மற்றும் சகோதரருடன் ராய் நகருக்கு வந்துள்ளார். கணவனிடம் மாட்டிக்கொண்டதை தன் காதலன் ஜமீலிடம் கூறியுள்ளார். ஜமீலுக்கு ஜக்கிய அரபு அமீரகத்தில் மாதம் ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை. சோனாலி, ஜமீல் இருவரும் நிர்மலை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

கொலை
கொலை

இதற்காக ஜமீல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கொல்கத்தாவுக்கு விரைந்துள்ளார். நவம்பர் 10-ம் தேதி இரவில் நிர்மல் தூங்கியவுடன் குழந்தையுடன் பக்கத்து அறைக்கு சென்றுவிட்டார் சோனாலி. பிறகு, ஜமீலுக்கு போன் செய்து வீட்டுக்குள் வரவழைத்துள்ளார். அதன்பின் இருவரும் சேர்ந்து நிர்மல் குமாரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர்.

இதன்பின் நிர்மலின் உடலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் உடலைத் தூக்கி வீசியுள்ளனர். சோனாலியின் வாக்குமூலத்தைக் கொண்டு ஜமீலை கைது செய்துள்ளோம். நிர்மல் குமாரின் மரணத்தை விபத்துபோல சித்திரிக்க முயற்சி செய்துள்ளனர். இதன்பின் இருவரும் அபுதாபியில் செட்டிலாக முடிவு செய்ததாக” அதிகாரிகள் தெரிவித்தனர்.