Published:Updated:

கரூர்: நிலப் பிரச்னை; இருதரப்பு மோதல்! - தடுக்கப்போன முதியவருக்கு நேர்ந்த துயரம்

கொலை
கொலை ( நா.ராஜமுருகன் )

உறவினர்களின் நிலப் பிரச்னை தொடர்பான சண்டையை விலக்கப்போன முதியவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குளித்தலை அருகே ஈச்சம்பட்டி பகுதியில் நிலப் பிரச்னை காரணமாக இரு தரப்பினரிடையே அடிதடி மோதல் ஏற்பட்டபோது, அதைத் தடுக்கப்போன முதியவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை
குளித்தலை
நா.ராஜமுருகன்
கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள சின்னயம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணாநாயக்கர் (வயது: 55). இவருக்கும், இவரின் சகோதரர் பொம்மாநாயக்கர் என்பவருக்கும் நிலப் பிரச்னை இருந்திருக்கிறது. இதன் காரணமாக, இரண்டு தரப்புக்கும் இடையில் முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. இந்த நிலப் பிரச்னையை வைத்து, இரண்டு தரப்புக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுமாம். இந்தநிலையில், வழக்கம்போல் கிருஷ்ணாநாயக்கர் குடும்பத்தாருக்கும், பொம்மாநாயக்கர் குடும்பத்தாருக்கும் இடையில் மீண்டும் நிலப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பும் கட்டையால் தாக்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த கிருஷ்ணாநாயக்கரின் அக்காள் கணவரும், மாமனாருமான காமாநாயக்கர் (வயது 75) அவர்களின் சண்டையைத் தடுக்க முற்பட்டபோது அவரின் தலையில் தடியால் பின்புறத்தில் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

கொலை
கொலை
நா.ராஜமுருகன்

அதோடு இந்த மோதலில் கிருஷ்ணாநாயக்கர் (65), இவரின் மகன் சின்னச்சாமி (27) ஆகிய இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, திருச்சி அரசு மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த தோகைமலை காவல் நிலைய போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பொம்மாநாயக்கர், பெருமாள், குமார், செல்லபாண்டியன், முத்துச்சாமி, பாலசுப்ரமணி, வேல்முருகன் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்துவருகின்றனர். உறவினர்களின் நிலப் பிரச்னை தொடர்பான சண்டையை விலக்கப்போன முதியவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`ஏழு பேருக்கு தூக்கு தண்டனை!’ - தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் பின்னணி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு