Published:Updated:

`கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது 35 வழக்குகள் பதிவு!’ - போலீஸ் டி.ஐ.ஜி

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில்வைத்து விசாரிக்கப்பட்டனர். அப்போது `நாங்கள் எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்துடுவோம்’ எனக் கூறியுள்ளனர். `எப்படித் தருவீர்கள்?’ என போலீஸார் கேட்டதற்கு உரிய பதில் இல்லை எனக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்ததையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைதுசெய்யப்பட்டனர். நான்கு நாள்கள் கஸ்டடியில் எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ``சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றும், மேலும் புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸை அழைத்துவரும் போலீஸார்
ஹெலிகாப்டர் பிரதர்ஸை அழைத்துவரும் போலீஸார்

கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் (51).எம்.ஆர்.சுவாமிநாதன் (48) சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்துவந்தனர். சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம்வந்ததால், கும்பகோணம் பகுதி மக்களால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என வணிகர்கள், தொழிலதிபர்கள், கறுப்புப் பணம் வைத்திருக்கும் பெரு முதலாளிகள், பொதுமக்கள் எனப் பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னதுபோலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு: ``போலீஸ் மீதுள்ள புகார் உட்பட  அனைத்தும் விசாரிக்கப்படும்" - ஐ.ஜி தகவல்

இந்தநிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்துவிட்டதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தலைமறைவாகினர். பின்னர் எம்.ஆர்.கணேஷின் மனைவி உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வக்கீல் ஒருவரின் பண்ணை வீட்டில் சகோதரர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து. அவர்களை போலீஸார் கைதுசெய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரையும் போலீஸார் கடந்த 9-ம் தேதி நான்கு நாள்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கஸ்டடி முடிந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த பிறகு மீண்டும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போலீஸ்
போலீஸ்

மேலும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்தும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, `நாங்கள் எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்து விடுவோம்’ என அவர்கள் கூறியுள்ளனர். `எப்படித் தருவீர்கள்?’ எனக் கேட்டதற்கு அவர்களிடம் உரிய பதில் இல்லை எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தலைமறைவான ஹெலிகாப்டர் பிரதர்ஸ்; பண்ணையில் ஆதரவின்றி நிற்கும் 350 வெளிநாட்டு பசு மாடுகள்!

அப்போது அவர் கூறியதாவது, ``கும்பகோணம் நிதி நிறுவனத்தில் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் 30 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகக் கூறி இதுவரை 35 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அவர்கள்மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தொடர்ந்து அவர்கள் மேல் மோசடிப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீண்டும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு