Published:Updated:

சிசிடிவி கேமரா... 2 சட்டை! - துப்பாக்கித் திருட்டில் நண்பருடன் கும்பகோணம் போலீஸ் சிக்கிய பின்னணி

கைதுசெய்யப்பட்ட காவலர் தீபக்
கைதுசெய்யப்பட்ட காவலர் தீபக் ( ம.அரவிந்த் )

திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்த தீபக், போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்துவைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை திருடி எடுத்துக்கொண்டு கடலூருக்குச் சென்றிருக்கிறார்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கி காணாமல்போன வழக்கில், ஒரு போலீஸ்காரரும், அதற்கு உதவிய அவருடைய நண்பரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

துப்பாக்கி
துப்பாக்கி

கும்பகோணம் பகுதிகளில் துப்பாக்கிப் புழக்கம் அதிகமிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையில், குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் திருப்பனந்தாள் அருகேயுள்ள மகராஜபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராம்குமார் (42), விளந்தகண்டம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (35), முட்டக்குடியைச் சேர்ந்த அரவிந்தன் (40) ஆகிய மூன்று பேரை கடந்த மார்ச் 19-ம் தேதி கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ஐந்து ஏர்கன் வகைத் துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு பெல்ட் ரிவால்வர் என எட்டு துப்பாக்கிகளையும், 67 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும் தோட்டாக்களும் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆயுத பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அறையைத் திறந்து துப்பாக்கிகளை எனண்ணியபோது 0.22 பேபி ஷாட் ரிவால்வர், பிபி பெல்லட் ஏர்கன் என இரண்டு துப்பாக்கிகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தகவல் வெளியேவும் கசிந்தது.

வாசுதேவன்
வாசுதேவன்

இதையடுத்து திருவிடைமருதுார் டி.எஸ்.பி அசோகன் துப்பாக்கி காணாமல்போனதாகச் சொல்லப்படுவது புரளி எனக் கூறியது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் காணாமல்போன துப்பாக்கியைக் கண்டுபிடிக்க எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

சிறப்புப் பிரிவு எஸ்.ஐ கண்ணன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ பிரகாஷம், ஏட்டுகள் மோகன், உமா சங்கர் உள்ளிட்ட ஏழு பேர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் துப்பாக்கியைத் திருடியதாகக் கூறி, திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக இருந்த தீபக் (26), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அவருடைய நண்பர் வாசுதேவன் இருவரையும் கைதுசெய்து தஞ்சையிலுள்ள சப்ஜெயிலில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட காவலர் தீபக்
கைது செய்யப்பட்ட காவலர் தீபக்

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக கும்பகோணத்திலேயே முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகளையும் கைதுசெய்த சிறப்புப் பிரிவு எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டிவருகின்றனர். துப்பாக்கி காணாமல்போன வழக்கில் போலீஸ் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுதான் முதன்முறை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கடலூரைச் சேர்ந்த தீபக் என்பவர் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தார். இவர் கடந்த மே மாதம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளைத் திருடிக்கொண்டு கடலூருக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

‘கைமாறிய துப்பாக்கி; விரட்டிச்சென்ற போலீஸ்!’ -ஆற்காட்டை அதிரவைத்த ரவுடிகளின் டீலிங்

இதற்கிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் பணிக்கு வந்தார். இந்தநிலையில் 18.8.2020 அன்று துப்பாக்கி காணாமல்போன தகவல் தெரியவருகிறது. இந்தத் தகவல் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயின் கவனத்துக்குச் சென்றது.

`ஸ்டேஷனிலிருந்த துப்பாக்கி எப்படிக் காணாமல் போகும்... இதன் விபரீதத்தை உணராமல் இப்படி அசால்ட்டாக இருந்திருக்காங்களே... நிச்சயம் திருப்பனந்தாள் ஸ்டேஷனில் இருந்தவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை’ என உடனடியாக விசாரணைக்காகத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தோட்டா
தோட்டா

டி.எஸ்.பி., ஸ்டேஷனிலிருந்த போலீஸார் எனப் பலரிடமும் தனிப்படையினர் விசாரணை செய்தததில், காவலர் தீபக் துப்பாக்கியைத் திருடியது தெரியவந்தது. தன்மீது சந்தேகம் ஏற்பட்டதை உணர்ந்த தீபக், தன் நண்பர் வாசுதேவனிடம் சொல்லி, கடலூரிலிருந்து துப்பாக்கியை எடுத்துவரச் சொல்லியிருக்கிறார்.

தான் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக வாசுதேவனிடம், `இரண்டு சட்டை எடுத்துக்கிட்டு வா... சிசிடிவி கேமரா இல்லாத வழியாக வந்து ஸ்டேஷன் முன்பு துப்பாக்கியைப் போட்டுவிடு. பின்னர் வேற ஒரு சட்டையை மாற்றிவிடு. உடனே இங்கிருந்து சென்றுவிடாமல் இரண்டு மணி நேரம் கழிச்சுப் போனால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது’ என தீபக் ஐடியா கொடுத்திருக்கிறார்.

கொரோனா சோதனை; சிறுமிகளுக்குப் பாலியல் சீண்டல்!- போலி சுகாதார ஆய்வாளரை வளைத்த குளச்சல் போலீஸ்

நண்பன் தீபக்குக்காக வாசுதேவன் அவர் கூறியபடியே செய்திருக்கிறார். `துப்பாக்கிதான் கிடைத்துவிட்டதே, இனி விசாரணை நடக்காது’ என நினைத்த தீபக்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில் தஞ்சையிலுள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு தீபக் மாற்றப்பட்டார். சிசிடிவி கேமரா பதிவால் சிக்கிவிடக் கூடாது என சமயோசிதமாகச் செயல்பட்ட தீபக், அதில் பதிவான காட்சிகள், செல்போன் பதிவுகள் அகிவற்றின் மூலம் சிக்கிக்கொண்டார். திருப்பனந்தாள் முதல் சிதம்பரம் வரையிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து இதை தனிப்படை போலீஸார் கண்டுபிடித்தனர்’’ என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு