Published:Updated:

கும்பகோணம்: `100-க்கு வந்த அழைப்பு!’ - எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்தக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகக் கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதுடன், கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

கும்பகோணத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வீடு புகுந்து எண்ணெய் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராமநாதன் மனைவி விஜயாவுடன்
கொலை செய்யப்பட்ட ராமநாதன் மனைவி விஜயாவுடன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (63). சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகள் சரண்யா இவரின் கணவர் கோவிந்த ராஜன். சரண்யா ஒரே மகள் என்பதால், அவரின் கணவர் கோவிந்தராஜன் வீட்டோடு மாப்பிளையாக இருந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் சரண்யா மற்றும் கோவிந்தராஜ் வெளியூர் சென்றிருந்த நிலையில், அன்றிரவு வீட்டில் தனியாக இருந்த ராமநாதனும், அவருடைய மனைவி விஜயாவும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் பத்திரிகை கொடுப்பதற்கு வந்திருப்பதாகக் கூறி வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

திருச்சி: ஜாமீனில் வந்த அண்ணன்; பைக்கில் மோதிய கார்! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

இதையடுத்து ரிமோட்டை பிடுங்கி டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர். அத்துடன் மேலும் 3 பேர் வீட்டுக்குள் வந்துள்ளனர். இதையடுத்து, 5 பேரும் சேர்ந்து முதலில் விஜயாவை மட்டும் தனியாக ஒரு அறையில் வைத்து அடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், ராமநாதனை சரமாரியாகத் தாக்கி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைக் கேட்டுள்ளனர். அவர், தர முடியாது என மறுத்து நிலையில் கொடுக்கவில்லை என்றால் உன் மனைவியைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகத் தெரிகிறது. அப்போது ராமநாதன் தன் மனைவியை எதுவும் செய்ய வேண்டாம் எனக் கெஞ்சியதுடன் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்து மர்ம நபர்களிடம் கொடுத்திருக்கிறார்.

ராமநாதன்
ராமநாதன்

அவற்றை வாங்கிக் கொண்ட மர்ம நபர்கள், `உன்னை விட்டால் போலீஸாரிடம் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவாய்’ எனக் கூறி கூர்மையான இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் ராமநாதன் கழுத்தில் குத்தினர். கணவரின் அலறல் சத்தம் கேட்டு துடித்த விஜயா, அவரை ஒன்றும் செய்து விடாதீர்கள் எனக் கதறியிருக்கிறார். இதில், ராமநாதன் வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயாவிடம் விசாரித்த பிறகு போலீஸார், அப்போது இதைத் தெரிவித்தனர்.

வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுன் கொலையாளிகளை பிடிப்பதற்கு 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொலை நடந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் கொலையாளிகளைப் பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர்.

கும்பகோணம் அதிர்ச்சி: கொலை வழக்கில் விடுதலையானவர்; பிள்ளைகள் கண்முன்னே வெட்டிக் கொலை!

இந்தநிலையில், 10 நாள்களுக்கு முன்பு காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு போன் செய்த ஒருவர் எண்ணெய் வியாபாரி கொலை செய்தவர்கள் யார் என்றும் அவர்களின் விபரத்தையும் கூறியுள்ளார். அவர் கூறியது உண்மைதானா என்பதை அறிய போலீஸார் மீண்டும் அந்த செல் நம்பருக்கு போன் செய்தபோது, அந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.

இதையடுத்து, அந்த செல் நம்பர் யாருடையது? அவர் எங்கிருக்கிறார் எனக் கண்டுபிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் கொலையாளிகள் பற்றிய விபரங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ராமநாதனை கொலை செய்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் போட்டோவைக் காண்பித்து ராமநாதன் மனைவி விஜயாவிடம் அடையாளம் கேட்டுள்ளனர். அவரும் வீட்டிற்கு வந்தவர்கள் இவர்கள்தாம் என அடையாளம் கூறியதாகத் தெரிகிறது.

சிவகங்கை: ராணுவ வீரர் வீட்டில் இரட்டைக் கொலை! - பணம், நகை கொள்ளை

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். `ராமநாதன் கொலை வழக்கு விசாரணையில் குற்றவாளிகளை பற்றி எந்தத் தடையமுமே கிடைக்காதது எங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது. ஆனால், விடாமல் நாங்க செய்த முயற்சியின் பலனாக கொலையாளிகளை நெருங்கும் நிலைக்குச் சென்றோம்.

கோவை: பரிசோதனை முடிவு; மறைக்கப்படும் தகவல்கள்! - பதற்றத்தில் போலீஸ், பொதுமக்கள்

அப்போதுதான் 100 அழைப்பிற்கு வந்த போனை வைத்து விசாரித்தோம். இதில் முதலில் 4 பேர், அதன் பிறகு 4 பேர் என மொத்தம் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்கள் உண்மையா என்று தொழில் நுட்பரீதியில் சிசிடிவியில் பதிவான காட்சிகள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து ஆராய்ந்து வருகிறோம். அத்துடன், கொலைக்கான ஆதாரங்களையும் திரட்டி வருகிறோம். அதன்படி, விசாரணையில் இருப்பவர்கள் உண்மையான கொலையாளிகள்தான் என உறுதி செய்யப்படுவார்கள். அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு