Published:Updated:

16 ஆண்டுகளாக பாலியல் தொல்லை; புகார் அளித்த 23 மாணவிகள்; கும்பகோணம் பள்ளி ஆசிரியர் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சேகர்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சேகர்

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டன. வகுப்பிற்கு வந்த பிளஸ் 1 மாணவிகளிடம் ஆசிரியர் சேகர் தனித் தனியாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து எல்லை மீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், 16 ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படுள்ள அந்த ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sexual Harassment  (Representational Image)
Sexual Harassment (Representational Image)
சென்னை: 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! - போக்சோவில் கைதான இளைஞர்கள்

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி, கணித மேதை ராமானுஜம் படித்த சிறப்புக்குரிய பள்ளி. அப்பள்ளியில், கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகரில் வசிக்கும் சேகர் (57) முதுகலை பட்டதாரி கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கணிதப் பாடம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக சேகர் மீது புகார்கள் எழுவது வாடிக்கை. அதன் பிறகு பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக் கொள்வார் சேகர். சிறிது காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளத் தொடங்குவார். பள்ளிக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் நிர்வாகமும் இதனை வெளியே தெரியப்படுத்தி சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டன. வகுப்பிற்கு வந்த பிளஸ் 1 மாணவிகள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக சேகர் தொடர்ந்து பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்து எல்லை மீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான 23 மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை விஜயாவிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமையாசிரியை, பள்ளிச் செயலாளர் வேலப்பனிடம் இது குறித்துத் தெரிவித்தார். அதன் பேரில் 23 மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியிலேயே விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியாவிடம் பள்ளி நிர்வாகம் சார்பிலும், மாணவிகளும் புகார் மனுக்களை அளித்தனர். இதையடுத்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

பள்ளி
பள்ளி

இது குறித்து பள்ளித் தரப்பில் விசாரித்தோம். சேகர் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகளைத் தவறான நோக்கத்துடன் தொட்டுப் பேசுவது போன்ற அருவருக்கதக்க செயல்களைச் செய்வது அவர் வாடிக்கை. வகுப்பு முடிந்ததும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஒரு மாணவியை மட்டும் இருக்க வைத்து அவரிடம் சில்மிஷம் செய்வதையும் தொடர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் அதிர்ந்த பள்ளி நிர்வாகம் சேகரை எச்சரித்தது. அப்போது, ``என்னை உங்களால எதுவும் செய்ய முடியாது, எனக்குப் பெரிய செல்வாக்கு இருக்கு'' என்று சேகர் அதட்டலாகப் பேசுவார் என்கிறார்கள். பள்ளிக்குக் கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இதனை உள்ளுக்குள்ளேயே முடித்து கொள்வதற்காக, கல்வித் துறையில் புகார் அளிக்கப்பட்ட பிறகும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 2006-ல் சேகரின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி செயலாளர் வேலப்பன்
பள்ளி செயலாளர் வேலப்பன்

இந்நிலையில் தற்போது சேகர் மீது ஒரே நேரத்தில் 23 மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். பள்ளி தரப்பில், `உங்களால் பள்ளிக்குக் கெட்டப் பெயர் ஏற்படப் போகிறது. நீங்களாக வி.ஆர்.எஸ் கொடுத்துட்டுச் சென்றுவிடுங்கள்' என்று கூறியுள்ளனர். அப்போதும், ``என் மேல் நடவடிக்கை எடுத்தால் தேவையில்லாத விபரீதங்களைச் சந்திப்பீர்கள், எனக்குத் துணையாக என் சமூகம் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார் சேகர். அதன் பிறகு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. ரவளிப்பிரியாவிடம் புகார் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் பள்ளித் தரப்பினர்.

இதுகுறித்து பள்ளியின் செயலாளர் வேலப்பன் கூறுகையில், ``பல ஆண்டுகளாகவே ஆசிரியர் சேகர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்தன. அவர் குறித்துக் கல்வித் துறைக்கும் நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். இப்போதும் புகார் வந்ததன் பேரில் மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் விசாரணை செய்ததில் மாணவிகளின் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது.

சிறுமி கொடுத்த புகார்; லிஃப்ட் கொடுப்பதுபோல் பாலியல் அத்துமீறல்! - உறவுக்கார நபர் கைது

ஏற்கெனவே பாலியல் விவகாரம் தொடர்பாக சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை செய்துவிட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினர். இப்போது பள்ளிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளோம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு