Published:Updated:

கொரோனா சோதனை: பெண்ணின் பிறப்புறுப்பில் ஸ்வாப் மாதிரி எடுத்த லேப் டெக்னீஷியன்; 10 ஆண்டுகள் சிறை!

Court -Representational Image

மூக்கு மற்றும் தொண்டையில் கொரோனா டெஸ்ட்டிற்கு மாதிரி எடுத்தார் லேப் டெக்னீஷியன். அதனை தொடர்ந்து, கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள பெண்ணுறுப்பிலும் ஸ்வாப் மாதிரி எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தயங்கினார்.

கொரோனா சோதனை: பெண்ணின் பிறப்புறுப்பில் ஸ்வாப் மாதிரி எடுத்த லேப் டெக்னீஷியன்; 10 ஆண்டுகள் சிறை!

மூக்கு மற்றும் தொண்டையில் கொரோனா டெஸ்ட்டிற்கு மாதிரி எடுத்தார் லேப் டெக்னீஷியன். அதனை தொடர்ந்து, கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள பெண்ணுறுப்பிலும் ஸ்வாப் மாதிரி எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தயங்கினார்.

Published:Updated:
Court -Representational Image

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய லேப் டெக்னீஷியன், பெண் ஒருவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க பெண்ணுறுப்பில் ஸ்வாப் மாதிரி எடுத்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமராவதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே அனைத்து ஊழியர்களும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளும்படி மால் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவர், சம்பந்தப்பட்ட லேப் டெக்னீஷியன் பணியாற்றும் மருத்துவமனைக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கச் சென்றார்.

COVID-19 Nasal swab test
COVID-19 Nasal swab test
AP Photo

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் அப்பெண்ணிற்கு மூக்கு மற்றும் தொண்டையில் கொரோனா டெஸ்ட்டிற்கு மாதிரி எடுத்தார் லேப் டெக்னீஷியன். அதனை தொடர்ந்து, கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள பெண்ணுறுப்பிலும் ஸ்வாப் மாதிரி எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தயங்கினார். ஆனால் வேறு வழியில்லாமல் டெஸ்ட் எடுக்க சம்மதித்தார். ஆனாலும் இது குறித்து தனது சகோதரனிடம் தெரிவித்தார். உடனே அவரின் சகோதரர் டாக்டர் ஒருவரிடம் சென்று, கொரோனா டெஸ்டிற்கு பிறப்புறுப்பில் ஸ்வாப் மாதிரி எடுக்கவேண்டுமா என்று கேட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் மட்டும்தான் மாதிரி எடுக்கப்படும் என்றும், வேறு எங்கும் எடுக்கப்படாது என்றும் டாக்டர் தெரிவித்தார். உடனே அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார், லேப் டெக்னீஷியன் மீது பாலியல் கொடுமை வழக்குப் பதிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு அமராவதி மாவட்ட நீதிமன்றத்தில் 17 மாதங்களாக நடந்து வந்தது. இதில் 12 பேர் சாட்சியம் அளித்தனர்.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு குற்றவாளி மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ சோதனைகளுக்கு வரும் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமையட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism