Published:Updated:

சென்னை பியூட்டிசியனுக்கு போலீஸ் எஸ்.ஐ மகனால் நேர்ந்த சோகம்!

சென்னை சூளைபள்ளத்தில் உள்ள அழகுநிலையத்துக்கு போலீஸ் எஸ்.ஐ மகன் உட்பட 4 பேர் வந்தனர். அங்கிருந்த பெண்ணை அவர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.


பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்
பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றம்) இவர் சூளைபள்ளத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கும் திலிபன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாகப் பழகினர். திலிபனின் சில நடவடிக்கைகள் சுமதிக்குப் பிடிக்கவில்லை. இதனால் திலிபனுடன் பேசுவதை சுமதி தவிர்த்தார்.

பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்
பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுமதியின் அழகு நிலையத்துக்கு திலிபன் மற்றும் அவரின் நண்பர்கள் ஆர்த்தி வேலு, டிரைவர் கோகுல், ஆனந்த் ஆகியோர் வந்தனர். அவர்கள் ஏன் திலிபனுடன் பேசுவதில்லை என்று சுமதியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், சில காரணங்களைச் சொல்லியதோடு இதற்கு மேலும் எனக்கு தொல்லை கொடுத்தால் போலீஸில் புகார் கொடுப்பேன் என்று சுமதி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தவர்கள், கத்தியை எடுத்து சுமதியின் கன்னத்தில் வெட்டியுள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். அடுத்து அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் அவர்கள் பறித்தனர். கன்னத்தில் வெட்டுப்பட்ட சுமதி, காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார்.


பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்
பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்

அதனால் பயந்துபோன திலிபனின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்திலும் சுமதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுமதியை வெட்டிவிட்டு செயினைப் பறித்துச் சென்ற குற்றத்திற்காக திலிபன், ஆர்த்திவேலு, டிரைவர் கோகுல், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுமதிக்கும் திலிபனுக்கும் இருந்த நட்பில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் திலிபன் மனவேதனையடைந்தார். இந்தத் தகவலை திலிபன் நண்பர்களிடம் கூறியதும் சுமதியின் அழகு நிலையத்துக்கு அவர்கள் வந்துள்ளனர். அப்போது நடந்த தகராறில்தான் சுமதியைத் தாக்கியுள்ளனர். சுமதி, திலிபன் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்
பியூட்டிசனைத் தாக்கிய வழக்கில் கைதானவர்

திலிபனின் நண்பனான ஆர்த்திவேலுவின் அப்பா, மாம்பலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார். மேலும் இவர் பிரபல ரவுடியின் கூட்டாளி. ஆர்த்திவேலு மீது எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், திருமுல்லைவாயில் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமதியைக் கன்னத்தில் வெட்டியது, செயினைப் பறித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்.

பியூட்டிசியன் சுமதியை கத்தியால் வெட்டிவிட்டு தங்கச் செயினைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.