Published:Updated:

சென்னை: தங்க நகைகள், லட்சங்களில் பணம்... ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த இளம்பெண் தற்கொலை

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்டத்தில் தங்க நகைகள், பணத்தை இழந்த இளம்பெண் பவானி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை: தங்க நகைகள், லட்சங்களில் பணம்... ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த இளம்பெண் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் தங்க நகைகள், பணத்தை இழந்த இளம்பெண் பவானி தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
ஆன்லைன் ரம்மி

சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர், பவானி என்பவரைக் காதலித்து கடந்த 8.5.2016-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு பவானி, குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. அதனால் பாக்யராஜ், உள்ளே சென்று பார்த்தபோது பவானி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த பாக்யராஜ் அதிர்ச்சியடைந்தார்.

பவானி
பவானி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர் இது குறித்து மணலி புதுநகர் காவல் நிலையத்துக்கு பாக்யராஜ் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பவானியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்துகொண்ட பவானிக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படவிருக்கிறது. இந்த நிலையில் பவானியின் தற்கொலைக்கான காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பி.எஸ்சி வரை படித்த பவானி, கடந்த ஓராண்டாக ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி வந்திருக்கிறார். அதை அவரின் கணவர், பவானியின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால் அதை அவர் கேட்காமல் தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறார். அதனால், 20 சவரன் நகைகளை பவானி இழந்திருக்கிறார். மேலும், சூதாட்டத்துக்கு அடிமையான பவானி, தன்னுடைய இரண்டு சகோதரிகளிடம் 3 லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளார். அந்தப் பணத்தையும் அவர் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதனால் மனவிரக்தியடைந்த பவானி, தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது" என்றனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism