Published:Updated:

சென்னை: அக்காவைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற தம்பி! - இருட்டில் நடந்தது என்ன?

ஆவடி

டெய்லர் கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அக்காவை, அவரின் தம்பி கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: அக்காவைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற தம்பி! - இருட்டில் நடந்தது என்ன?

டெய்லர் கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அக்காவை, அவரின் தம்பி கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஆவடி

சென்னை ஆவடி, பருத்திப்பட்டு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் சையத் உமர். இவரின் மனைவி ஆயிஷா (39). இவர் கடந்த 19.1.2022-ம் தேதி ஆவடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனக்கு 2003-ம் ஆண்டு சையத் உமர் என்பவருடன் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள் உள்ளனர். நான் என் மூன்று மகன்களையும் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கவைத்து படிக்கவைத்துவருகிறேன். என் அப்பா சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

என் அம்மா பெயர் விக்டோரியா. அவர் சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்துவருகிறார். என் பாட்டி, என் உறவினர்கள் மாங்காடு பத்ரிமேடு பகுதியில் வசித்துவருகின்றனர். நான் காடுவெட்டி பச்சையம்மன் கோயில் அருகே டெய்லர் கடை நடத்திவருகிறேன். என் உடன்பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். என் இரண்டாவது தம்பி பெயர் ரியாஸ். அவனுக்கு 32 வயது ஆகிறது. அவனுக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து ரியாஸ், தனியாக மாங்காடு பகுதியில் வசித்துவருகிறான். என் தம்பிக்கு நான்தான் எல்லாம் பார்த்துவருகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கடந்த 18.1.2022-ம் தேதி இரவு 7 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ஆவடி அந்தோணியார் சர்ச்சுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். ஆர்டிஓ அலுவலகம் அருகே இருட்டாக இருக்கும். அந்த இடத்தில் வரும்போது என் தம்பி ரியாஸ், அவனது ஆட்டோவில் காத்திருந்தான். நான் அவனைப் பார்த்துவிட்டு பார்க்காததுபோலச் சென்றேன். அப்போது என் தம்பி ரியாஸ், என்னை வழிமறித்து `உன்னிடம் பேச வேண்டும்’ என்று கூறினான். அவன் கஞ்சா அடித்திருந்ததால் நான் `வீட்டுக்கு வா பேசிக்கொள்ளலாம்’ என்று கூறினேன். ஆனால் அவன் `நான் பேசணும்னு சொன்னா நிக்க மாட்டியா!' என்று கூறி எனது ஸ்கூட்டி பைக்கை கோபத்தில் காலால் எட்டி உதைத்தான்.

கத்தி
கத்தி

பின்னர் அவன் `என்னுடைய ஆர்.சி புக்கை வாங்கி தரமாட்டியா?’ என்று கூறியதோடு, மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டினான். நான் அதை தடுத்தபோது தாடை கழுத்து மற்றும் இடது கை விரலில் வெட்டு விழுந்தது. உடனே நான் `காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டேன். பின்னர் நான் மயங்கிவிட்டேன். அதன் பிறகு என் தம்பி என்னுடைய பேக், செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டான். பின்னர் என்னுடைய சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் என்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். என்னிடம் போலீஸார் விசாரிக்க நான் நடந்ததைச் சொன்னேன். எனக்கு எழுத முடியாததால் நான் சொன்னதை எழுதிப் படித்துக் காட்டினார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் இந்திய தண்டனைச் சட்டம், 295 பி, 341, 307 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து ரியாஸைத் தேடிவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism