Published:Updated:

`இன்ஸ்டாகிராம் தொழிலதிபர்.. இளம் பெண்களைக் குறிவைத்து மோசடி!’ -யார் இந்த இன்ஜினீயர் சுஜி?

இன்ஜினீயர் சுஜி
இன்ஜினீயர் சுஜி

சென்னை டாக்டரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நாகர்கோவில் இன்ஜினீயர் சுஜி குறித்து அதிர்ச்சி தகவல்களை பெண் டாக்டரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில் குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்தின் இ-மெயிலுக்கு சென்னை பெண் டாக்டர் புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதன்பேரில்போலீஸ் எஸ்.பி ஸ்ரீநாத், நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் காசி என்ற சுஜியிடம் விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் சுஜியிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட சுஜி
கைது செய்யப்பட்ட சுஜி

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுஜி பள்ளியில் படிக்கும் போதே ஒரு ப்ளேபாய் போன்று தன்னை நினைத்து பல மாணவிகளை காதல் வலையில் விழ வைப்பதும், அவர்களிடமிருந்து பணம் வாங்கி நண்பர்களுடன் ஜாலியாக செலவு செய்வதையும் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார். கல்லூரிப் படிப்பு முடிந்த நிலையில் தந்தையின் இறைச்சி வியாபாரத்துக்கு உதவி வந்தார். ஒருபுறம் இறைச்சி ஆர்டர் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தார். மற்றொருபுறம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் போலியாக கணக்கு தொடங்கி அதில் தன்னைத் தொழிலதிபர் போன்றும், சமூக ஆர்வலர் போன்றும் வெளிப்படுத்தும் பதிவுகளைப் போட்டுவந்துள்ளார். தனது புகைப்படம் மற்றும் பதிவுகளுக்கு கமென்ட் இடும் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்களுடன் நட்பாகப் பழகி, பின்னர் காதலிப்பதாக நெருங்கிப் பழகி ஏமாற்றி வந்துள்ளார். தற்போது பெண் மருத்துவர் வழக்கில் சிக்கி விட்டார்.

இப்போது சுஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள், வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. அவரது மொபைல் போனில் பல பெண்களின் புகைப்படங்கள் உள்ளன. ஆனால் அதுகுறித்து இதுவரை வேறு யாரும் புகார் அளிக்கவில்லை. சுஜியின் நண்பர்களையும் விசாரிக்க முடிவுசெய்துள்ளோம்” என்றார்.

வழக்கறிஞர் புருஷோத்தமன்
வழக்கறிஞர் புருஷோத்தமன்

பெண் டாக்டரின் வழக்கறிஞர் புருஷோத்தமனிடம் பேசினோம். ``நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் சுஜியும் பெண் டாக்டரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். அப்போது, சுஜியும் பெண் டாக்டரும் காதலித்துள்ளனர். பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை வாங்கியுள்ளார் சுஜி. இந்தச் சமயத்தில்தான் சுஜியின் அங்கிளுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பெண் டாக்டர் உதவி செய்துள்ளார்.

இதற்காக சென்னைக்கு வந்த சுஜி, அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர் ஒருவரை ஏமாற்றியுள்ளார். இந்தச் சமயத்தில் சுஜியின் செல்போனை ஏதேச்சையாகப் பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார் பெண் டாக்டர். ஏனெனில் அந்தச் செல்போனில் வேறு சில பெண்களுடன் சுஜி நெருக்கமாக இருந்துள்ளார். இதுகுறித்து பெண் டாக்டர் சுஜியிடம் கேட்டபோதுதான் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் சுஜியிடம் பேசுவதை பெண் டாக்டர் தவிர்த்துள்ளார்.

இந்த டீமில் உள்ளவர்கள் வசதியான மற்றும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்களை சமூகவலைதளங்கள் மூலமாகக் கண்டறிந்து ஏமாற்றிவருகின்றனர். சுஜியின் போனில் உள்ள பெண்களிடம் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.
வழக்கறிஞர் புருஷோத்தமன்
கைது செய்யப்பட்ட சுஜி
கைது செய்யப்பட்ட சுஜி

இதையடுத்துதான் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சுஜி. பணத்தைக் கொடுக்கவில்லை என்றதும் பெண் டாக்டரின் தனிப்பட்ட படங்களை சமூகவலைதளத்தில் போன் நம்பருடன் பகிர்ந்துள்ளார். அதனால், பெண் டாக்டருக்கு பலர் போன் செய்துள்ளனர். இதன்காரணமாக மனவேதனையடைந்த பெண் டாக்டர், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு ஆறுதல் கூறி சுஜி மீது ஆன் லைனில் புகாரளித்தோம். அதன்பேரில் குமரி மாவட்ட போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தைப் போலவே சுஜியின் பின்னணியில் சிலர் உள்ளனர். இந்த டீமில் உள்ளவர்கள் வசதியான மற்றும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்களை சமூகவலைதளங்கள் மூலமாகக் கண்டறிந்து ஏமாற்றிவருகின்றனர். சுஜியின் போனில் உள்ள பெண்களிடம் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும். ஏற்கெனவே அரசு உயரதிகாரியின் மகளும் இந்தக் கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளார். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதிய அந்த அதிகாரி இடமாறுதல் பெற்று சென்றுவிட்டார்.

`இன்ஸ்டாகிராம் நட்பு; வினையாக முடிந்த விபரீதம்'- சென்னை டாக்டரை ஏமாற்றிய குமரி இன்ஜினீயர்
காதல்
காதல்

சுஜி, தன்னை ஒரு பெரிய தொழிலதிபர் என்றுகூறிதான் முதலில் பழகுவார். பின்னர், அன்பாகவும் ஆறுதலாகவும் பேசி, குடும்பப் பின்னணிகளைத் தெரிந்துகொள்வார். காதல் வலை வீசி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்ப வைப்பார். பிறகு கொஞ்சம், கொஞ்சமாகப் பணத்தை வாங்கி ஏமாற்றுவார். காதலிக்கும் போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை வைத்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டு மிரட்டுவார். பணம் கொடுக்கவில்லை என்றால் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை செல்போன் நம்பர்களுடன் பதிவு செய்துவிடுவார். எனவே போலீஸ் பிடியில் சிக்கியுள்ள சுஜியிடம் விசாரித்தால் அவரின் சுயரூபம் மற்றும் இந்தக் கும்பலின் பின்னணி குறித்த முழுவிவரங்கள் தெரியவரும். பெண் டாக்டரைப் போல இனியாரும் இந்தக் கும்பலால் பாதிக்கப்படக்கூடாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு