Published:Updated:

சென்னை: `ஏன் இப்படி என்னை ஏமாற்றுகிறாய்?' - பெண் கொலையில் தோல் வியாபாரி சிக்கிய பின்னணி

கொலை

கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண்ணுடன் பழகிய தோல் வியாபாரி, கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை: `ஏன் இப்படி என்னை ஏமாற்றுகிறாய்?' - பெண் கொலையில் தோல் வியாபாரி சிக்கிய பின்னணி

கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண்ணுடன் பழகிய தோல் வியாபாரி, கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
கொலை

சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகர் வி.வி.கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெண்மதி (28). இவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் கடந்த ஒரு மாதமாகக் குடும்பத்தினருடன் வசித்துவருகிறேன். எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகின்றன. என் கணவர் பெயர் ஆறுமுகம். அவர் போரூரில் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். என் அப்பா பெயர் ராஜா. எனக்கு இரண்டு வயதாக இருக்கும்போது என் அப்பா வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு, அம்மா சாந்தியை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா ராஜா இறந்துவிட்டார். என் அம்மா தனியாக வாழ்ந்தபோது பார்த்திபன் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. பார்த்திபனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

திருமணம்
திருமணம்

என் அம்மா சாந்தியுடன் பார்த்திபன் பழகியது அவரின் மனைவிக்குத் தெரியவந்தது. அதனால் என் அம்மா சாந்தியைவிட்டு விலக, செட்டில்மென்ட் செய்து தருகிறோம் என பார்த்திபன் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி ஊரப்பாக்கத்தில் பார்த்திபனுக்குச் சொந்தமான சொத்துப் பத்திரத்தை என் அம்மாவிடம் கொடுத்து அதை விற்று, பணத்தை எடுத்துக்கொள்ளும்படி கூறினர். பின்னர் அந்த இடம் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டது எனத் தெரியவந்தது. அது குறித்து பார்த்திபனிடம் கேட்டபோது விருகம்பாக்கத்திலுள்ள வழக்கறிஞர் ஒருவர் அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். அதன்படி நானும் அம்மா சாந்தியும் அங்கு சென்றோம். அங்கு பார்த்திபன் அவரின் மனைவியுடன் வந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது நாங்கள் பார்த்திபனுக்குச் சொந்தமான எழுச்சியூர் என்ற இடத்திலுள்ள சொத்தின் பத்திரத்தைக் கேட்டோம். அவரும் அந்தப் பத்திரத்தை எங்களிடம் கொடுத்தார். அங்கு சென்று விசாரித்தபோது அந்த இடத்துக்குப் பாதை இல்லை எனத் தெரியவந்தது. அதனால் பார்த்திபனிடம் என்னுடைய அம்மா போனில், `ஏன் இப்படி என்னை ஏமாற்றுகிறாய்?’ என்று கேட்டார். இதையடுத்து 15.7.2022-ம் தேதி பார்த்திபன் என் அம்மாவுக்கு போன் செய்து மீண்டும் விருகம்பாக்கத்திலுள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து 5 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். அதன்படி நான், என் கணவர் ஆறுமுகம், அம்மா சாந்தி ஆகியோர் அங்கு சென்றோம்.

கொலை
கொலை

அப்போது அங்கு வழக்கறிஞர், பார்த்திபன், அவரின் மனைவி பத்மஸ்ரீ ஆகியோர் இருந்தனர். அப்போது அவர்களிடம் நானும் அம்மாவும் `எங்களுக்கு இடம் வேண்டாம், பணம் தந்தால் போதும்’ என்று கூறினோம். அதற்கு பார்த்திபனின் மனைவி இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். அதற்கு நானும் அம்மாவும் `ஆறு லட்சம் ரூபாய் கொடுங்கள்’ என்று கேட்டோம்.

அதற்கு சம்மதிக்காத பார்த்திபன், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அம்மா சாந்தியின் இடது பக்கத்தில் ஓங்கி குத்தினார். உடனே அம்மா ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். பார்த்திபனை நான் தடுத்தபோது அவரும் என்னைச் சரமாரியாக கத்தியால் குத்தினார். அதில் எனது இடது கை, வலது கை, இடது தாடை ஆகியவற்றில் வெட்டு விழுந்தன. என் கணவர் ஆறுமுகம் பார்த்திபனைத் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் வெட்டினார். இதில் ஆறுமுகத்துக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. எங்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, பார்த்திபன் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். எங்கள் மூன்று பேரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருநங்கை கைது
திருநங்கை கைது

என் அம்மா சாந்தி சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்றுவருகிறார். பணம் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியது மட்டுமல்லாமல் என்னையும், என் அம்மாவையும், என் கணவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வெட்டிய பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப்பிறகு பார்த்திபன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி, நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. கைதான பார்த்திபன் தோல் வியாபாரம் செய்துவருகிறார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.