Published:Updated:

திருவள்ளூர்: திருமணத்துக்குப் பின் ரகசிய வாழ்க்கை! - இளம்பெண்ணுக்கு ஆண் நண்பரால் நடந்த கொடூரம்

கொலை
கொலை

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண்ணின் கைகளைப் பின்பக்கமாக கட்டிய ஆண் நண்பர், விஷம் கொடுத்து இளம்பெண்ணைக் கொலை செய்திருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம், மொன்னவேடு அஞ்சல், மேலானூர் கிராமம், மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் உமா (45). இவர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய கணவர் வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். நான் மீன் வியாபாரம் செய்துவருகிறேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் செல்வி என்கிற பிரியங்கா (25).

கொலை
கொலை
representational image
சென்னை: ரூ.10 லட்சம் கடனை வாங்கச் சென்ற ரெளடி; வழிமறித்த கும்பல்! - பழிக்குப் பழி கொலை கொடூரம்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த கார்த்திக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மெக்கானிக் மற்றும் ஆட்டோ டிரைவராக கார்த்திக் வேலை பார்த்துவருகிறார். பிரியங்கா, திருவள்ளூர் ஆவடி ரோடு அருகிலுள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தார். பிரியங்காவுக்கு இரண்டு குழந்தைகள். குடும்பத்துடன் பிரியங்கா திருவள்ளூரில் குடியிருந்தார். அப்போது திருவள்ளூரை அடுத்த நார்தவாடா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனால் கார்த்திக்குக்கும் பிரியங்காவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரியங்கா என்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டார். என் மகள் பிரியங்கா அடிக்கடி அவளின் தோழியான பவித்ரா வீட்டுக்குச் சென்று வருவார். வழக்கம்போல 4.3.2021 அன்று காலை வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். காலை 10 மணியளவில் நான் வீட்டில் இருந்தபோது மருமகன் கார்த்திக் வந்தார். அப்போது அவர் பிரியங்காவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக என்னிடம் கூறினார். அதனால் நானும் மருமகன் கார்த்திக்கும் பிரியங்கா வேலை பார்க்கும் பெட்ரோல் பங்குக்குச் சென்றோம். அப்போது பிரியங்கா வேலைக்கு வரவில்லை என்று பெட்ரோல் பங்கில் இருப்பவர்கள் கூறினர்.

எப்ஃஐஆர்
எப்ஃஐஆர்

அதனால் பிரியங்காவின் தோழி பவித்ரா வீட்டுக்கு நாங்கள் இருவரும் சென்றோம். அப்போது பவித்ராவின் உறவினர்கள் அவள் திருவாலங்காடு சென்றிருப்பதாகக் கூறினர். உடனே பவித்ராவுக்கு நான் போன் செய்தேன். அப்போது அவர் உடனடியாக திருவாலங்காடு மருத்துவமனைக்கு வரும்படி கூறினார். அங்கு சென்றபோது திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மகள் பிரியங்கா வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரியங்காவை அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பிரியங்காவை திருவள்ளூருக்கு அழைத்துச் சென்றோம். அப்போது என்ன நடந்தது என்று பிரியங்காவிடம் நான் கேட்டபோது, `திருவாலங்காட்டிலுள்ள சன்னதி தெருவில், ராஜ்குமாரும் நானும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது அங்கு வந்த கார்த்திக்குக்கும் ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கார்த்திக் சென்றுவிட்டார். அதன் பிறகு தன்னைத் திருமணம் செய்துகொண்டு என்னுடன்தான் நீ வாழ வேண்டும் என்று ராஜ்குமார் என்னிடம் கூறினார். இல்லையென்றால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார். அதையும் மீறி நான் வீட்டைவிட்டுக் கிளம்பியபோது ஆத்திரமடைந்த ராஜ்குமார், என்னுடைய கையை பனியன் துணியால் பின்பக்கமாகக் கட்டி, கட்டில்மீது தள்ளி படுக்கவைத்தார்.

கைது
கைது

அவர் பாக்கெட்டில் வைத்திருந்த கூல்டிரிங்க்ஸ் பாட்டிலிலிருந்த விஷத்தை வாயில் ஊற்றினார்' என்று கூறினாள். அதன் பிறகு பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு, பவித்ராவுக்கு தகவல் கூறினர். திருவள்ளுர் டோல்கேட் பகுதியில் ஆம்புலன்ஸ் வந்தபோது பிரியங்கா பேச முடியாமல் மயங்கிவிட்டார். திருவள்ளூர் மருத்துவமனையில் பிரியங்காவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எனது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த ராஜ்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் திருவாலங்காடு போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரைப் பிடித்து விசாரித்தனர். அதன் பிறகு அவரைக் கைதுசெய்தனர்.

குடும்பத்தைப் பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு